நான் ஒரு ஜனாதிபதியானால் எனது நாட்டிற்கு சேவை செய்வேன். என் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவேன். மத, மொழி சார்பற்ற நடுநிலையாளனாக சேவை புரிவேன். எனது தேசத்தில் அனைவரைக்கும் சம உரிமை வழங்குவேன். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிடுவேன். எனது தேசத்தை சுத்தமாகப்பேணி அழகிய தேசமாக்குவேன். சுமூகமான சர்வதேச உறவுகளைப் பேணுவதன் மூலம் என் நாட்டை சர்வதேச ரீதியில் உயர்த்துவேன். பொருளாதார நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டு எனது நாட்டை பொருளாதார ரீதியில் செல்வந்த நாடாக்குவேன். எனது நாட்டில் வைத்தியம், கல்வி, நீதி போன்ற சேவைத்துறைகளை வளர்த்திடுவேன். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். ஏழைகளுக்கு தகுந்த உதவிகளை வழங்கி ஏழை இல்லா நாடாக எனது நாட்டை மாற்றிடுவேன். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அதனை தீர்த்து வைப்பேன். நான் ஜனாதிபதி என்றபோதிலும் ஆட்சிக்கு அப்பாற்பட்டு என் மக்களோடு சகஜமாக வாழ்ந்திடுவேன். எனது நாட்டில் நல்லாட்சிக்கு வழிவகுப்பேன்.
Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Saturday, 17 October 2020
Subscribe to:
Posts (Atom)
வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்
பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்! வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...
-
பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்! வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...
-
தலைமைத்துவம் என்பது மனிதர்களை நெறிப்படுத்தி, இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அவர்களை இயக்கும் திறமையாகும். 'திறமை வகித்தல்' என்பது ...
-
இலங்கையில் திண்மக் கழிவுப் பொருட்கள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இதற்கு இலங்கை வளர்முக நாடாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில்...