Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, 20 October 2020

சார்க் பிராந்தியத்தில் வறுமை,பதற்றம்,தொழிலின்மையை போக்க பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்


உலகில் பல்­வேறு பிராந்­தி­யங்கள்   பொரு­ளா­தார வளர்ச்­சியில்   வலுப்பெற்று  பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணைந்து  பய­ணித்­துக் கொண்­டிருக்­கின்ற சூழலில் பல்­வேறு வகை­யான தனித்­துவ ஆற்றல்­களை கொண்­டுள்ள  தெற்­கா­சியப் பிராந்­தியம்  இன்னும் அர­சியல்  மற்றும் பாது­காப்பு  பிரச்­சி­னை­களில் சிக்கி  பொருளாதார நன்­மையை உறுப்பு நாடு­களின் மக்­க­ளுக்கு பெற்றுக்கொ­டுக்­காமல்  பய­ணிக்­கின்­றது. 


சார்க் பிராந்­தி­யத்தில் வரு­ட­மொன்­றுக்கு  81164  மில்­லியன்  டொலர் பெறு­ம­தி­யான  வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்­களை செய்வ­தற்­கான ஆற்றல் காணப்­ப­டு­கின்­ற­போ­திலும் ஐ.நா.வின்  அண்­மைய தர­வு­க­ளின்­படி வரு­ட­மொன்­றுக்கு 26806 மில்­லியன்  டொலர் பெறு­ம­தி­யான  வர்த்­தக நட­வ­டிக்­கை­களே  உறுப்பு நாடுகளுக்கிடையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 


இதன்­மூலம்  எந்­த­ளவு தூரம் தெற்­கா­சி­யா­வா­னது பிராந்­தியம் என்ற­வ­கையில்   பொரு­ளா­தார ரீதியில் பின்­ன­டைவில் சிக்கியிருக்கின்றது என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 


தற்­போ­தைய உலக  நிலை­மை­களை எடுத்துப் பார்க்­கும்­போது பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார  கூட்­டி­ணை­வுடன்  செயற்­ப­டு­வது பாரிய நன்­மை­களைத் தரு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இதற்கு பல உதா­ர­ணங்­களை முன்­வைக்­கலாம். அவ்­வாறு பல உதாரணங்கள் உலகில் இருக்­கின்­ற­போ­திலும்  தெற்­கா­சி­யாவில் அதனை சாத்­தி­யப்­ப­டுத்­து­வது கடி­ன­மா­கவே உள்­ளது. 


அந்­த­வ­கையில் கடந்த பெப்­ர­வரி மாதம்         அமெ­ரிக்­காவின்   அரிசோனா  பல்­க­லைக்­க­ழ­கத்தின் வோல்டர் க்ரோன்கிட் ஊடகவியல்  பாட­சா­லையின் டொனல்ட் டப்­ளியு ரெய்னோல்ட்ஸ் வர்த்­தக ஊட­க­வி­ய­லுக்­கான தேசிய நிலை­யத்தின் ஏற்­பாட்டில்   டுபாயில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில்  சார்க்   நாடு­களின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கலந்துகொண்­ட­துடன் சார்க் பிராந்­தியம்  பொரு­ளா­தார ரீதியில்  ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் கிடைக்கும் நன்­மைகள் தொடர்பில்  ஆராய்ந்­தனர்.   இதன்போது பல விட­யங்கள்   வெளிக்­கொ­ண­ரப்­பட்­டன. 


தெற்­கா­சி­யா­வினால் ஏன் முடி­ய­வில்லை? 


பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார கூட்­டி­ணை­வுடன்  செயற்படுவதானது   உறுப்பு நாடு­க­ளுக்கு பாரிய நன்­மை­களை கொடுப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.    விசே­ட­மாக ஐரோப்­பிய ஒன்­றியம் ஆசியான்இ  போன்ற   அமைப்­புக்கள் இன்று பொருளாதார ரீதியில் இணைந்து செயற்­ப­டு­வதன் மூல­மாக அதன்  உறுப்பு நாடு­க­ளுக்கு கிடைத்­துள்ள நன்­மைகள் தொடர்பில் அவதானம் செலுத்­தும்­போது சார்க் பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் இணைந்து செயற்­ப­ட­வேண்­டி­யதன்  முக்­கி­யத்­து­வத்தை உணர முடி­கின்­றது. 


சார்க் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு  35 வரு­டங்கள் கடந்துவிட்டபோ­திலும் இது­வரை  தெற்­கா­சிய பிராந்­திய அமைப்பினால் பொரு­ளா­தார ரீதியில் ஒருங்­கி­ணைந்து செயற்பட்டு  அதன் நன்­மை­களை பெற முடி­யாத சூழலே நிலவுகிறது. இதற்கு பல்­வேறு கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன.   குறிப்­பாக இந்தப் பிராந்­தி­யத்தில் காணப்­ப­டு­கின்ற இந்­தியா இலங்கை பங்­க­ளாதேஷ்,மாலை­தீவு,பா­கிஸ்தான்,நேபாளம் பூட்டான், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய ஒவ்­வொரு நாடு­களும்  தனித்துவ­மான  ஒரு  பிரச்­சி­னை­க­ளுடன் உள்­ளன. 


 அதே­போன்று இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டையில் காணப்­ப­டு­கின்ற  நீண்­ட­கால முரண்­பாடும்  சார்க் பிராந்­தியம்     பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வ­தற்கு பாரிய தடை­யாக உள்­ளது. 


 தெற்­கா­சி­யாவை வாட்டும் வறுமை 


உலகின் ஏனைய பிராந்­தி­யங்கள் பொரு­ளா­தார ரீதியில் ஒன்றிணைந்து செயற்­ப­டு­கின்­றதால் ஏற்­ப­டு­கின்ற நன்­மைகள் தொடர்பில்  சார்க் நாடு­களின் தலை­வர்கள்  உணர்ந்து செயற்படுவதற்கு முன்­வ­ர­வேண்டும்.    சார்க் நாடு­களைப் பொறுத்த­வ­ரையில் வறு­மையும் வேலை­யின்­மையும் தலைவிரித்தா­டிக்­கொண்டே இருக்­கின்­றன. வறு­மையை எடுத்து நோக்­கு­வோ­மானால் 54 வீத­மான வறுமை ஆப்­கா­னிஸ்­தானில் காணப்­ப­டு­கின்­றது. 


அதே­போன்று இந்­தியாஇ  மற்றும் பங்­க­ளாதேஷ்இ பாகிஸ்தான் ஆகிய நாடு­களில் 20 வீதத்­திற்கும் மேற்­பட்ட  வறுமை வீதம் காணப்­ப­டு­கின்­றது. எனவே இவற்றை  போக்­கு­வ­தற்கு   வெளிநாட்டு முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அதேபோன்று பிராந்­தி­யத்­தி­லுள்ள   நாடு­க­ளுக்­கி­டை­யி­லான    வர்த்­தக உறவு அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். எனினும்  சார்க்பிராந்தியத்தைப்  பொறுத்­த­வ­ரையில் இதற்­கான  ஆற்றல் இருந்தும்   அர­சியல் தேவை இல்­லா­மையினால்  வெற்­றியை நோக்கி நகர முடி­யாமல் உள்­ளது.    


100 வருட பகையை மறந்த பிரான்ஸ் – ஜேர்­மன்


இன்று நாம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வளர்ச்­சியை எடுத்துநோக்கினால்  உல­கத்தில் காணப்­ப­டு­கின்ற  பொரு­ளா­தார ரீதியில் மிகப்  பல­மான ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. அதற்­காக ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளி­டையே முரண்­பா­டுகள் இல்லை என்று கூறி­விட முடி­யாது.  ஜேர்மன்இ பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கி­டையில் 100 வருட பகைமை காணப்­பட்­டது.  எனினும்   பொரு­ளா­தார ரீதியில்  ஒன்­றி­ணை­ய­வேண்­டிய தேவையை முன்­னி­றுத்தி அந்தப் பகை­மையை மறந்து அந்த இரண்டு நாடு­களும்  இணைந்து செயற்­ப­டு­கின்­றன.   ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணை­வ­தற்கு முன்னர் அயர்­லாந்து பொரு­ளா­தார ரீதியில் மிகவும் பின்­தங்­கிய நாடாக இருந்­தது. ஆனால் இன்று  அந்த நாடு பாரிய வளர்ச்­சியை அடைந்­தி­ருக்­கின்­றது.  இதற்கு பிராந்­தி­யத்தில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவே பிரதானகாரணமாகும். எனவே மக்­க­ளுக்கு நன்­மை­யைப் பெற்றுக்கொ­டுக்­கக்­கூ­டிய   பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக நாடுகள் ஏனைய புறக் கார­ணி­களை  புறந்­தள்­ளி­விட்டு  ஒன்­றி­ணைய வேண்டும் என்­பதே இன்­றைய தேவை­யாக காணப்­ப­டு­கின்­றது.  


இந்­தியா – பாகிஸ்தான் 


இந்த இடத்தில்  இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான புரிந்­து­ணர்வே மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களே  பிராந்தியத்தை வாட்டி வதைக்­கின்­றது.  இலங்­கையும் இந்­தி­யாவும்  சுதந்­திர வர்த்­தக  உடன்­ப­டிக்­கை   கைச்­சாத்­திட்­டதன் பின்னர்  பாரிய வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது.  2000ஆம்  ஆண்டு இந்த சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை அமு­லுக்கு வந்­தது.  அதன்­ பின்னர் இரண்டு நாடு­க­ளுக்குமிடை­யி­லான வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்கள் அதிகரித்­துள்­ளன. எனவே இவ்­வாறு பொரு­ளா­தார தடை­களை களைந்து  பிராந்­திய ரீதியில்  இணைந்து  செயற்­ப­டு­வ­தா­னது மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. 


சார்க் பிராந்­தி­யத்தின் மனி­த­வளம் 


விசே­ட­மாக சார்க் நாடு­க­ளுக்­கி­டையில்  மனி­த­வளம் மிக முக்கியமான பொக்­கி­ஷ­மாக காணப்­ப­டு­கின்­றது. சார்க் நாடு­களில்  பயிற்றுவிக்­கப்­பட்ட திற­மை­யான மனித வளம் காணப்­ப­டு­கின்­றது.  ஆனால் அவை இன்று மேற்கு நாடு­க­ளி­லேயே பயன்படுத்தப்படுகின்­றன. அதனை சார்க் நாடுகள் பயன்படுத்துவதற்கு முன்­வ­ர­வேண்டும்.  அதே­போன்று தொழில்நுட்ப   அறிவை  சார்க் நாடுகள் பகிர்ந்­து­கொள்­ள­ வேண்டும்.   சார்க் பிராந்­தி­யத்தில் சில நாடுகள் தொழில்நுட்ப அறிவில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளன.  


சார்க் நாடு­களின்  தலை­வர்­களின் கவ­னத்­துக்கு 


இங்கு மிக முக்­கி­ய­மாக   சார்க் நாடு­களின் தலை­வர்கள்   சார்க் பிராந்­தியம் என்ற ரீதியில் பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணைந்து செல்­ல­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்­து­கொள்­ள ­வேண்டும்.   உலக சனத்தொகையில் கால்­வா­சிப்பேர்  சார்க் பிராந்­தி­யத்தில் வாழ்­கின்­றனர். எனவே இங்கு காணப்­ப­டு­கின்ற  பொரு­ளா­தார சந்தை­வாய்ப்­புக்கள் தொடர்பில்  ஏனைய நாடுகள் கவனம் செலுத்த­வேண்டும்.  சார்க் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான முத­லீ­டு­களும் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான அர்ப்­ப­ணிப்­பு­களும் இங்கு முக்கியமா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. 


இந்­தியா  வாகன  உற்­பத்­தியில் முன்­னணி வகிக்­கின்­றது.  இலங்கை   இறப்பர்இ தேயிலைஇ ஆடை  உற்­பத்­தி­யிலும் மீன்­பி­டி­யிலும் முன்­னணி வகிக்­கின்­றது.  பாகிஸ்தான்   பாஸ்­மதி அரி­சியில் பிரபலமா­கி­யி­ருக்­கி­றது. பங்­க­ளாதேஷ் ஆடைக்­கைத்­தொ­ழிலில்  முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. எனவே இந்த நாடுகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து ஒரு  பொது­வான திட்­டத்தின் கீழ் செயற்­ப­டு­வது பாரிய பொரு­ளா­தார நன்­மை­களை  நாடு­க­ளுக்கு பெற்றுக்கொடுக்கும். 


எனவே பிராந்­தியம் என்ற ரீதியில் பொரு­ளா­தார ரீதியில் இணைந்து செயற்­ப­டும்­போது   பிராந்­தி­யத்தில் பின்­தங்­கிய நிலையில் காணப்ப­டு­கின்ற நாடு­களும் உயர் நன்­மையை அடையும். நாகேஷ் குமாரின் யோசனை 


இது தொடர்பில்  டுபாய் மாநாட்டில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடகளின் ஆசிய பசுபிக் பொரு­ளா­தார சமூக விவ­கா­ரங்­க­ளுக்­கான பணிப்­பாளர் டாக்டர் நாகேஷ்குமார் ஒரு முக்­கிய விட­யத்தை குறிப்­பிட்டார்.  அதா­வது  சார்க் பிராந்­தி­யத்தில் அமைதி நிலவவேண்­டு­மாயின் அதற்கு காணப்­ப­டு­கின்ற ஒரே வழி  பிராந்தியம்  பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வ­தாகும். பொருளாதார ரீதியில் ஒவ்­வொரு நாடு­களும் தங்­கி­யி­ருக்கும் பட்சத்தில் அங்கு அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டாது என்­பதே உண்­மை­யாகும்  என்ற  ஒரு யதார்த்­த­மான விட­யத்தை அவர் கூறினார். 


காரணம்  அமை­திக்கு பங்கம் ஏற்­படும்போது  பொரு­ளா­தார தேவையைக் கருத்தில் கொண்டு   நாடுகள் முரண்­பா­டு­களை  தவிர்க்கும் என்­பதே உண்­மை­யாகும்.  அதனால்  பிராந்­தி­யத்தில் நாடு­க­ளுக்கிடை­யி­லான பொரு­ளா­தார தங்­கி­யி­ருத்­தலும் ஒரு முக்கிய கார­ணி­யா­கவே உள்­ளது. 


டாக்டர் கணே­ஷ­மூர்த்தி 


இதே­வேளை இந்த விடயம் குறித்து கொழும்பு  பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் டாக்டர் கணேசமூர்த்தி  இவ்­வாறு கூறு­கிறார்.


பிராந்­திய ரீதியில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஏற்படவேண்டுமாயின் அது நான்கு கட்­டங்­களில் அமையவேண்டும். சுதந்­திர வர்த்­தக நட­வ­டிக்கை  சுங்க ஒன்றியம் பொது சந்தை மற்றும் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஆகிய நான்கு  கட்­டங்கள் இங்கு காணப்­ப­டு­கின்­றன.  தற்­போது நாம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை எடுத்துப் பார்த்தால் அது நான்­கா­வது கட்­டத்­தையும் தாண்டி  நிற்­கின்­றது. ஆனால்   தெற்­கா­சிய பிராந்­தி­ய­மா­னது  இன்னும் முத­லா­வது கட்­டத்­தி­லேயே உள்­ளது.  உண்­மையில் தெற்கா­சி­யா­வா­னது  முத­லா­வது கட்­டத்தில் கூட இல்லை என்று கூறலாம்.


 எனவே  தெற்­கா­சிய  பிராந்­தி­யத்தில் நாடு­க­ளுக்கு இடையில் பொரு­ளா­தார ஒன்­றி­ணைவு ஏற்­ப­ட­ வேண்­டு­மாயின் அதன் ஆற்றலை  தலை­வர்கள் உண­ர­வேண்டும்.  அத்­துடன்  இந்தியாவுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களே  பின்­ன­டைவு  பிர­தான கார­ண­மாகும். 


 சார்க் நாடுக­ளுக்கு இடை­யி­லான சப்டா எனப்­ப­டு­கின்ற  சார்க் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. எனவே  தெற்­கா­சிய பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் ஒன்றிணைந்து மக்­க­ளுக்கு அதன் நன்­மைகள் கிடைக்­க­ வேண்டுமானால் தெற்­கா­சிய பிராந்­திய நாடு­களில் அர­சியல் தீர்மானங்கள்  எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று  டாக்டர் கணேசமூர்த்தி  கூறு­கிறார் 


இவ்­வாறு பார்க்­கும்­போது சார்க் பிராந்­தியம்  பொரு­ளா­தார ரீதியில்   ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முதலில் அதன் தலை­வர்கள்  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.  துணிச்­ச­லான முடி­வு­களை எடுக்­க­வேண்டும். தற்­போ­தைய சூழலில் ஐரோப்­பிய ஒன்­றியம் ஒரு பல­மான அமைப்­பாக  இருப்­ப­தற்கு காரணம்   அந்த நாடுகளின்  தலை­வர்­களின் அர்ப்­ப­ணிப்­பாகும்.  ஆசியான் அமைப்பையும்  நாம் இந்­த­ வ­கைக்குள் சேர்க்­கலாம். எனவே சார்க் நாடு­களின் தலை­வர்கள் இது­கு­றித்து ஆழ­மாக சிந்­திக்­க ­வேண்டும். 


அமர்ந்து பேசுங்கள் 


இதற்கு சார்க்  தலை­வர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து முதலில்  பேச்சு­வார்த்தை  நடத்­த­வேண்டும். ஆரம்பக் கட்­ட­மாக சார்க் நாடுகளில் பொரு­ளா­தார நிபு­ணர்கள் பங்­கேற்கும் ஒரு மாநாட்டை   நடத்­த­வேண்டும்.  தற்­போது இந்த ஊட­க­வி­யலா­ளர்­க­ளுக்­கான மாநாட்டை நடத்­திய அரி­சோனா பல்­க­லைக்­க­ழ­கமே சார்க் நாடுகளின் பொரு­ளா­தார  நிபு­ணர்கள் கலந்­து­கொள்ளும் மாநாட்டை நடத்தி சார்க் பிராந்­தியம்     பொரு­ளா­தார  ரீதியில் இணைந்து செயற்­ப­டு­வதால்  எவ்­வா­றான நன்­மை­களை பெற்றுக்கொள்ளும் என்­பது குறித்து  ஆரா­யலாம்.   அது தொடர்பில்  ஒரு பிர­க­ட­னத்தை வெளியி­டலாம். அந்தப் பிரகடனத்தை சார்க் நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு  அனுப்பி சார்க் பிராந்­தி­யத்தில் காணப்­ப­டு­கின்ற பொரு­ளா­தார  ஆற்­றலை உணரவைக்­க ­வேண்டும்.  


அத­னூ­டாக ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற உலகில் ஒரு பலம்வாய்ந்த  பொரு­ளா­தார பிராந்­தி­ய­மாக  சார்க் பிராந்­தி­யத்தை உரு­வாக்­கலாம் என்ற விடயம் உணர்த்­தப்­ப­ட­ வேண்டும்.   இதன் ஆரம்ப நட­வ­டிக்­கைகள் கடி­ன­மா­ன­தாக இருக்­கலாம். ஆனால் இதற்­கான முயற்­சி­களை எடுப்­பது அவ­சி­ய­மா­கி­றது.   


இன்று உலகில் வலு­வான அமைப்­பாக இருக்­கின்ற ஐரோப்­பிய ஒன்­றியம்  ஒரே இரவில் இந்த  நிலையை அடை­ய­வில்லை. பாரிய போராட்­டங்கள் யுத்­தங்­களின் பின்­னரே   ஐரோப்­பிய  ஒன்­றியம் தற்­போது இந்த நிலை­மைக்கு வந்­தி­ருக்­கின்­றது.   


எனவே இதற்­கான நட­வ­டிக்­கை­களை படிப்­ப­டி­யாக முன்னெடுக்கலாம். கல்­வி­யா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் பொருளா­தார நிபு­ணர்கள்  இது தொடர்பில் வலி­யு­றுத்தும் அழுத்தங்­களை பிர­யோ­கிப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.  


சார்க் பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வதன் மூலம் ஏற்­படும் நன்­மைகள்  மிக அதி­க­மாகும்.  இத­னூ­டாக உறுப்பு நாடுகளின் வறுமைஇ வேலை­யின்மை வீதங்­களை குறைக்க முடியும். பிராந்­தி­யத்தில் அமை­தியை நிலை­நாட்ட முடியும்.  பிராந்­தி­யத்தின்  மனி­த­வளம்இ  தொழில்­நுட்ப  அறிவு என்­பன பலம­டையும்.  மக்கள் பொரு­ளா­தார நன்­மை­களை அதி­க­ளவில் பெற்­றுக்­கொள்­வார்கள்.  


தெற்­கா­சிய அபி­வி­ருத்தி  வங்­கியை உரு­வாக்­கலாம் 


தற்­போது சார்க் பிராந்­தி­யத்திலுள்ள நம்­பிக்­கை­யின்­மையை துடைத்­தெ­றிய முடியும்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் முரண்பாடு எவ்வாறு சார்க்  பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதை தடுக்கின்றதோ அதனைவிட சார்க் பிராந்தியத்தில் காணப்படும் நம்பிக்கையின்மை அழுத்தம் பிரயோகிக்கும் காரணியாக உள்ளது. அதனால் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படுவது இன்றியமையாதது. மேலும்   போக்குவரத்து துறை வலுவடைவதுடன்  மக்கள் தொடர்பும் அதிகரிக்கும்.


 தெற்காசிய அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவதற்கான குறிக்கோளை நோக்கியும் பயணிக்கலாம். தெற்காசிய வங்கியை உருவாக்கவேண்டுமானால் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு கட்டங்களில் நான்காவது கட்டத்துக்கு சார்க் பிராந்தியம் செல்லவேண்டும். ஆனால்  சார்க் பிராந்தியம் பொருளாதார ஒன்றிணைவில் இன்னும் முதலாவது கட்டத்தையே அடையவில்லை என்பதே இங்கு யதார்த்தமானதாக உள்ளது. 


சார்க் பிராந்தியம் மிகவும்  மெதுவாகவே பொருளாதார ரீதியில் அடியெடுத்து வருகின்றது. விரைவுபடுத்த  வேண்டியது அவசியமாகும்.  குறிப்பாக புவியியல்  ரீதியிலான  சார்க் பிராந்தியத்தின் அமைவிடம்  தொடர்பாக சார்க் தலைவர்கள் உணர்ந்து செயற்படுவதுடன் அதன் ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.   


சார்க்  பிராந்தியத்தில் காணப்படும்  பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான  ஆற்றலை  உறுப்பு


நாடுகளின்  தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.   விசேடமாக அரசியல் கட்சிகள் தங்களது  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி  மக்களை  தெளிவு படுத்தவேண்டும்.   சார்க் பிராந்தியத்தில் பதற்றத்தை தடுப்பதற்கான ஒரே வழி பொருளாதார ரீதியான ஒன்றிணைவு என்பதே உண்மையாகும்.

Monday, 19 October 2020

பொருளாதார எழுச்சி




கடந்த காலத்தில் மோசமாக வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் ஸ்திரநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. மக்களை திசைதிருப்பும் விதத்தில் எதிரணித்தரப்பினர் என்னதான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் நாடு பொருளாதார ரீதியில் மேலெழுந்து வருவதை மறுக்கமுடியது. பாரிய கடன்சுமைகளுக்கு அரசு முகம்கொடுத்த போதிலும் வீழ்ந்து போயிருந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் அரசாங்கம் ஓரளவுக்கேணும் வெற்றிபெற்றே இருக்கின்றது. வளர்முக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது பொருளாதார வளர்ச்சியில் நாடு படிப்படியாக எழுச்சிபெறுவதை காண முடிகிறது.


பரவலான அபிவிருத்தித் திட்டங்கள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் திட்டமிடப்பட்ட வியூகங்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில செயற்பாடுகள் தாமதப்பட்டாலும் கூட பெரும்பாலான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டே வருகின்றன. அவற்றை பொதுமக்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் அமையப்பெற்றுள்ளது. சாதாரண மக்களது வருமானம் கூட கணிசமான அளவுக்கு அதிகரித்திருப்பதையும் மறுதலிக்க முடியாது. அரசு வகுத்த திட்டங்கள் சிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.


அரச தரப்பை விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எதிரணித் தரப்புகள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி பொதுமக்களை திசைதிருப்பி ஆளும் தரப்புக்கு எதிரானதொரு பிம்பத்தை வெளிக்காட்ட முனைகின்றன. அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை என்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எதிரணி ஈடுபட்டு வருகின்றது. ஆனால் யதார்த்தத்தை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர். என்றாலும் குறைபாடுகள் எதுவுமே இல்லை என்று கூற முற்படவில்லை,


பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் மக்களால் உணரக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை காணமுடிகிறது. குறுகிய காலத்துக்குள் கடன் சுமையில் கணிசமான அளவை திருப்பிச் செலுத்தியதோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்த அரசாங்கம், அரச ஊழியர்களு க்கு சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இந்த நிலையிலும் கூட சில தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.


கணிசமான அரச வேலைவாய்ப்புகளுடன், தனியார்துறையை ஊக்குவித்து அவற்றினூடாகவும் பெருமளவு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவித்து பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. உடைந்துபோன உள்ளங்களைக் கூட ஓட்டவைக்கச் செய்வதில் திருப்தி கொள்ளக்கூடியதாகவே உள்ளது.


மக்களின் எதிர்பார்ப்புகள் கணிசமான அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தி மக்களது மனங்களை ஈர்த்தெடுப்பதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நிம்மதியை குறுகிய காலத்துக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இருண்ட யுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்வினை ஒளிபெறச்செய்து மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மக்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பணியையும்கூட அரசு முன்னெடுத்தது. இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் புரிந்துணர்வான ஒரு மைல் கல்லுக்கு வந்த தருணத்தில் தீயசக்திகள் திட்டமிட்டு இனவாதத் தீயை கக்கினர். அதனையும் கூட இந்த அரசு சாதுர்யமாக முறியடித்தது. எதிர்ப்பு அரசியல் என்பது ஜனநாயக அரசியலில் ஒரு அங்கம்தான். ஆனால் அந்த எதிர்ப்பு அரசியல் ஆரோக்கியமானதாக அமைதல் வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.


அபிவிருத்தி என்பது நாட்டின் சகல பகுதிகளுக்கும் விரிந்ததாகக் காணப்பட வேண்டுமென்பதில் இந்த அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. தெற்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சமமாக மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டியதொன்றாகும். எந்தவொரு பிரதேசத்துக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது. வளங்கள் கூட சரிசமமாக பகிரப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


கடந்த காலத்தில் சகல விடயங்களும் இன ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதன் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. காலத்துக்குக் காலம் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கூட செல்லாக் காசு போன்ற நிலையிலேயே பார்க்கப்பட்டன. இந்த முரண்பாட்டைத் துடைத்தெறிய வேண்டிய அவசியத்தை 2015ல் அரசு உணர்ந்த நிலையிலேயே சில காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முக்கியமானதுதான் வடக்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துள்ளது.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பும் அபிவிருத்தியில் பாரியதொரு மைல் கல்லாகும். வடக்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அந்த மண்ணில் பொருளாதாரப் புரட்சியொன்றுக்கு வித்திடப்பட்டுள்ளது. வடபுலத்து மக்கள் மனங்களில் ஊன்றிப்போயிருந்த விரச நிலை மாறும் யுகமொன்று உதயமாகியுள்ளது. அந்த மக்களது மனங்களிலும் நம்பிக்கை ஒளி பரவத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிக விரைவில் முழு நாடும் ஒன்றுபட்டு இது எங்கள் நாடு, எங்கள் மண் என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...