Monday, 19 October 2020

மலையகப் பெண்களும் பாராளுமன்றமும்

அண்மையில் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வரும் ஒரு தொணிப்பொருள் பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது சவால் மிக்கதொரு பயணம்”. உண்மையில் பெண்களுக்கான பிரத்தியேக உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் பிரத்தியேக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை முன்வைப்பதற்குமான ஒரு அதிகாரம் பொருந்திய பெண் தலைமைத்துவம் அவசியமானதாகும். இதன்படி இலங்கையானது ஆசியாவின் நீண்டதொரு அரசியல் கலாசாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதுடன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆண்களும் பெண்களும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகளை உடையவர்கள். ஆனால்; அரசியல் உரிமைகளை பொருத்தவரை பெண்கள் இரண்டாம் தர பிரஜைளாகவே கருதப்படுகின்றனர். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம் (பாராளுமன்றம், மாகாணசபை, ஏனைய உள்ளுராட்சி தாபனங்கள்) மிக குறைவான வீதத்திலும் சவால்நிலைக்குட்பட்டதாகவும் நிலவுகிறது. இதற்கு எமது மலையக பிரதேசமும் விதிவிலக்கல்ல. இது குறித்து பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.


மலையகத்தை பொருத்தவரை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி, கேகாலை (மலையகம் என்பது தேசிய ரீதியில் பரந்துபட்டது. கட்டுரையின் நோக்கத்திற்காக தேர்தல் மாவட்டங்கள் சுட்டிகாட்டப்பட்டுள்ளது) பிரதேசங்களிலிருந்து பெண்களின் பாரளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கிறதென்பது வெளிப்படையான நிதர்சனம். இலங்கையில் 1931 ஆம் ஆண்டில் முதல் பெண் பாராளுமன்ற பிரவேசத்திலிருந்து தற்போது (2020) வரை 20 ற்கும் குறைவான பெண்களே தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் முறைமையினூடாக மலையகப் பிரதேசத்திலருந்து பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர். அவ்வாறு மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற அங்கத்துவம் வகித்த பெண்கள் சிலர்: 

நுவரெலிய -னுரரெவாடையமய ஆரனலையளெநடயபந சுநரெமய ஆநnமைந ர்நசயவா (21ஃ07ஃ1977 -20ஃ12ஃ1988 இ15ஃ02ஃ1989 -18ஃ08ஃ2000)இ

 கண்டி -வுயஅயசய முரஅயசi ஐடயபெயசயவநெ 06ஃ1949 - 08ஃ04ஃ1952, பதுளை- ர்நஅய சுயவயெலயமநஇ இரத்தினபுரி - ளுரசயபெயni ஏளையமய நுடடயறயடய.


இதில் வெளிப்படையான விடயம், பல்லினம் சமுகம் கொண்டதும் நாட்டின் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய மலையக பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சார்ந்த பெண்களே தவிர மலையக பிரதேசத்தின் சிறுபான்மை இனத்திலிருந்து எந்தவொரு பெண்களும் தெரிவு செய்யப்ட்டிருக்கவில்லை. 

அப்படியிருக்க இதுவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றிருக்கவில்லை எனினும் அதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிட முடியாது. அதாவது மலையகத்தில் சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்டம் வரையில் மாத்திரமே வந்துள்ளனரே தவிர வெற்றிபெரும் கட்டத்தினை இதுவரை எட்டியிருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். காரணம் நடைமுறையில் மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சவாலுக்குரியதாக காணப்படுகின்றமை.

இவ்வாறு மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சந்தர்ப்பம் சவாலுக்குரியதாகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றது. 


1. அரசியலில் ஆணாதிக்கமும் கட்சி அரசியலும்

மலையக அரசியல் கட்சிகளை பொருத்தவரை, அவற்றில் பெண் உறுப்பினர்களை விட கூடுதலாக ஆண் உறுப்பினர்களே உள்ளனர். தேர்தலில் களமிறங்கும் போதும் கட்சி ரீதியாக / சுயேட்சை குழு அடிப்படையிலோ போட்டியிடுவதிலும் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களே அதிகம். ஆக பொதுவெளியில் மலையக அரசியல் ஒரு ஆணாதிக்க அரசியலாகவே தோற்றமளிக்கின்றது.

மேலும் பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகளில் பொதுவாக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதும் அவற்றோடு; சாதாரண பின்னனி கொண்ட பெண்களை கட்சியில் உள்வாங்குவதும் மிக குறைவாகும். பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு கொண்ட கட்சியின் கொள்கைகளோடு முரண்படாது செல்லும் பெண்களை ஓரளவு உள்வாங்கியுள்ளது. இதிலிருந்து விடுத்து சுயேட்சையாக பெண்கள் தேர்தலில் களமிறங்கினாலும் (தேர்தலின் போது/முன்/பின்) ஆணாதிக்க சமுகத்தால் அவர்களுக்கெதிராக பின்வரும் இரு வழிமுறையிலான வன்முறைகளை சமீப காலத்தில் கட்டவிழ்க்கப்ட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

1. குறித்த பெண்வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் முன்னேற்பாடாக அவர்கள் தொடர்பான பிழையான எதிர்மறை எண்ணங்களை (நடத்தை கெட்டவள், ஊழல் செய்பவர், திறமையில்லாதவர் போன்ற எண்ண கருக்கள்) மக்கள் மனதில் நேரடியாக ஃ மறைமுகமாக விதைத்தலும் குறித்த நபருக்கு அதனூடாக மன உளைச்சலை ஏற்படுத்தலும்.

 

2. பெண்களுக்கெதிராக முரட்டுத்தனமான வன்முறைகளை கட்டவிழ்த்தல் (உடல் ஊறு, ஆதன தீங்கு ஏற்படுத்தல், தாக்குதல்கள், அச்சுறுத்தல்)


2.மலையக பெண்களுக்கு அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் இன்மையுடன் கூடிய அசமந்த போக்கு. ஆர்வம் உடையவர்களுக்கு போதியளவிலான வலுவூட்டல்களும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப்பெறாமை.


3.அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மலையக பெண்களுக்கு போதியளவிலான விழிப்பணர்வின்மையும் அரசியல் அறிவு மட்டம் குறைவாக காணப்படல்.


4.மலையக பெண்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக கலாசார சூழல் காரணிகள்.

5.மலையக பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் மக்களிடையே குறிப்பாக சக பெண்களிடையே கிடைக்கின்ற வரவேற்பு, ஊக்கமளிப்பும் கூடிய ஆதரவும் மிக குறைவு. 


6.கட்சிகளில் பெண்களுக்கு போதுமானளவு இட ஒதுக்கீடு வழங்கப்படாமை.


7.கட்சி தவிர்த்த சுயேட்சை குழுவில் போட்டியிட்டாலும் அது போதியளவு அதிகார வலுப்படுத்த படாமை.


8.மலையகத்தில் தடைகள் தாண்டி தேர்தல் சவாலை வென்றெடுக்கும் அளவுக்கு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவு. சில பெண்கள் பாராளுமன்ற பிரவேசத்திற்கு முயற்சித்தாலும் பொதுவெளியில் அவர்களின் ஆளுமையில் திருப்தி அடையாத மக்கள் வாக்களிப்பதில்லை. 


9.ஆளுமையும் அரசியல் அறிவும் உடைய பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட, பிரச்சாரம் செய்ய போதியளவு பண பலம் இல்லாமை.


10.இருப்பினும் வெறுமனே பண பலமும் அரசியல் பக்க பலமும் கொண்ட பெண்களுக்கு ஆளுமை விருத்தியுடன் முன்னேற்றகரமான அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்க முடியாமல் இருத்தல். இதுபோன்ற இன்னோரான காரணங்களை குறிப்பிட முடியும். 


இவ்வாறான சாவால்கள் எதுவாக இருப்பினும் மலையக பெண்களின் பாராளுமன்ற பிரவேசத்திற்கான நடைமுறையிலான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? என்றால் நிச்சயம் 100 க்கு 75ம%  மேலான வீதமான வாய்ப்புக்கள் பின்வரும் குறிப்பிடும் விதத்தில் உள்ளது.  


1. மலையகத்தில் தொழிற்சங்கங்களே அரசியல் கட்சிகளாக செயற்பட்டு வரும் வித்தியாமான போக்கு காணப்படும் நிலையில் மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலே ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்களே; ஈடுபடுவதுடன் தொழிற் சங்கத்திற்கும் பெண் தொழிலாளிகளின் சந்தா பணமே கூடுதலாக கிடைக்கப்பெறுகிறது. இதன்படி அதிகளவிலான பெண்களே தொழிற்சங்க உறுப்பினராகவும் உள்ளதுடன் சந்தா பணம் அதிகளவு பெண்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அதே விகித அடிப்படையில் பெண்களுக்கு கட்சியில் அங்கத்துவம் வழங்கப்படுகிறதா என்பது கேள்வி? 


ஆக தொழிற் சங்கத்திற்கு ஆண்களிலும் பார்க்க பெண் தொழிலாளிகளினால் சந்தா பணமே கூடுதலாக செலுத்த முடியுமாக இருக்க கூடிய நிலையில், ஏன் அவ் தொழிற்சங்க பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பெண்களுக்கான தனி ஒரு தொழிற்சங்கத்தினையும் கட்சியினையும்; உருவாக்கி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிட முடிமான சந்தர்ப்பம் உள்ளது.


2. மலையகத்தினை பொருத்தவரை 1ஃ3 பங்கு பெண்களே பெருந்தோட்ட துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய தொழிற் துறையில் (சட்டம், மருத்துவம, பொறியில், வர்த்தகம், ஏனைய நிர்வாக மற்றும் ஆசிரியர் துறை) ஈடுபட்டு வரும் பெண்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் மலையகத்தில் எந்தவொரு தொழிற்சங்களோ ஃ அமைப்புக்களோ இதுவரை உதயமாகியருக்கவில்லை. எனவே அவர்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்புக்களை ஃ தொழிற்சங்களை உருவாக்கி அப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம்.


3. மேலும் மலையக தேர்தல் கலாசாரத்தில் ஒரு ஆண் வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களுக்கு பெண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுவதில்லை. காரணம் ஆண்கள் மட்டும் சமவாய்ப்பு சிந்தனையை செயற்படுத்துவதில்லை. அப்படி சமவாய்ப்பு சிந்தனையை சிந்திப்பார்களாயின் நிச்சயம் பெண் பிரதிநிதித்துவம ஒன்றினை பெறலாம்.


4. மேலும்; ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் யாதெனில் கடந்த காலத்தில ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மலையகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவை களமிறக்கியப்போதும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமில்லாத தன்மையினாலும் கேலி கிண்டல்களுக்கு உட்பட்டதுடன்; அப்பெண் குழுவுக்கு சரியான வலுவூட்டல் இல்லாமையால் தேர்தலில் தோல்வியும் கண்டனர். ஆக சரியான அரசியல் வலுவூட்டல்களை வழங்குமிடத்து பெண்களும் பிரதிதநிதித்துவம் பெறலாம்.


இவ்வாறான சாத்தியப்பாடுகள் இருப்பினும் அரசியல் மட்டத்திலும் சமுதாய மட்டத்திலும் இது குறித்து சிந்திப்பது மிக குறைவாகும். இவற்றோடு பின்வரும் சமுக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதினூடாக நிச்சயம் மலையக பெண்களின் நாடாளுமன்றத்திற்கான பிரவேசத்தினை உறுதிபடுத்த முடியும்.

1. மலையக அரசியல் கட்சிகள் சந்தா பணம் பெறும் விகிதத்திற்கேற்ப பெண்களுக்கான அங்கத்துவ இட ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.


2. மலையகத்தில் எத்தனையோ படித்த, பகுத்தறிவுடன் சிந்திக்க கூடிய அரசியல் அறிவு கொண்ட பொது நலனுடன் செயற்படக்கூடிய ஆளுமை கொண்ட பெண்கள் உள்ளனர். இவர்களை ஒன்றினைத்து அரசியல் துறையில் சரியான வலுவூட்டல்களை வழங்க வேண்டும்.


3. மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சி திட்டங்களை பிராந்திய ரீதியல் மலையகத்தில் செயற்படுத்த வேண்டும்.


4. மலையக ஆணாதிக்க சமுகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான விடயங்களை முறையாக சிந்தித்து எம் சமுகம் செயற்படுமாக இருந்தால் மலையகத்தில் பிராந்திய ரீதியில் ஒரு வலுவான நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அபிவிருத்தியுடன் கூடிய மலையகத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இதில் வேடிக்கை யாதெனில் பூனைக்கு யார் மணிக்கட்டுவது….?

மலையகத்தில் சிசுக்கொலை



குழந்தைகள் என்பது வரம். அதற்காக ஏங்கும் உள்ளங்கள் கோடி.  எனினும்  அதனை சாபக்கேடாகவும் துச்சமாகவும் கருதும் மனிதர்களும் இந்த சமுகத்தில்தான் வாழ்கின்றனர்.  இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில்  நாடளாவிய ரீதியில் குறிப்பாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சிசுக்கொலை சம்பவத்தை குறிப்பிடலாம். இது ஒரு குற்றச்செயல் எனபதனையும் தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயலாகும். காரணம் உலகில் பிறக்கும்  ஒவ்வொரு உயிரினமும் தான் உயிர் வாழும் உரிமையினை கொண்டுள்ளது. அதனை அழிப்பதற்கான உரிமை எவருக்குமில்லை.

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் குறித்த குற்றமானது பொதுவாக குழந்தையின் பெற்றத்தாயினாலே  புரியப்பட்டுள்ளதுள்ளது. இதற்கமைவாக குழந்தை பிறந்த குறுகிய காலத்தினுள்ளே அவற்றிற்கு கொடூர உடலூறு ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவை கொடுரமாகவூம்   கொலைச்செய்யப்பட்டுள்ளன. இவ் சிசுக்கொலை குற்றமானது வெறுமனே குழந்தை பிரவிசத்த பெண்ணால் மாத்திரமே புரியப்படுவதில்லை.சில சந்தர்ப்பங்களில் இதற்கு உடந்தையாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,  அயலவர்கள், நண்பர்கள் பட்டாளம் என பலரும் காணப்படுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் இறுதியில் குறித்த பெண்ணே அதன் ஆபத்தான பின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டிய  வேண்டிய நிலை ஏற்படும். காரணம் குற்றம் புரிந்த பின்னர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதோடு  அவர்களின்  முழு எதிர்கால வாழ்வும் சிதைவடைந்துவிடும்.

இலங்கையினை பொருத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலியல் உறவினை வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது. எனினும் வலிதான திருமணத்தின் மூலமாக குறித்த இரு தம்பதியினரிற்குமிடையே பிறக்கும் குழந்தைகளே நெறிமுறையான குழந்தைகளாக சட்டம் அங்கீகரிக்கின்றது.  இதற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளின் நெறிமுறை தொடர்பில் கேள்வி எழுவதுடன் சில சந்தர்ப்பங்களில் அவை பிறந்த குறுகிய காலத்திலே (1 வருடத்திற்குள்) மேற்கூறியவிதத்தில் சிசுக்கொலையும்  செய்யப்பட்டுகிறது.அவ்விதம் கொலைசெய்யப்பட்ட சிசுக்கள் பிறந்தது ,

1. வலிதான திருமண உறவிற்கு அப்பால் வாழ்க்கை துணை அல்லாத வேறு நபருடன் கொண்டிருந்த நெறிமுறையற்ற உறவின் விளைவாக.

2. திருமண உறவு நிலைக்குழைந்த நிலையில் : வாழ்க்கை துணை இறப்பு  / கணவர் விட்டுச்செல்லல் / விவாகரத்து பெற்றிருத்தல் / நீதிமுறை பிரிவினையில் வாழுதல் போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்க்கை துணை அல்லாத நபருடன் கொண்டிருக்கும் உறவின் நிமித்தமாக பிறந்த குழந்தைகள்.

3. காதல் / கூடி வாழ்தல் / வேறுவகை உறவின் கீழ்  பிறந்த பிள்ளைகள்

4. பெண் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகத்தின் விளைவாக பிறக்கும் பிள்ளைகள்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளைகளில் 100 க்கு 99 % மான குழந்தைகள் பின்வரும் ஏதோ ஒரு காரணத்திற்காக  கைவிடல் / கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகுகின்றன.

இதற்கு பின்னனி காரணியாக  இருக்ககூடிய விடயங்கள் தான் என்ன? என ஆராயும் போது பின்வரும் விடயங்கள் நிகழ்வுகளின்  அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகிறது. அவை: 

1.பெருந்தோட்டப்பகுதியில் இருக்க கூடிய சிக்கலான குடும்ப அமைப்புக்கள். உம்: பெரும்பாலும் வாழ்க்கை துணையில் ஒருவர் வேலை நிமித்தம் வெளிநாடு செல்வதும் நீண்ட கால இடைவெளியில் அங்கேயே தங்கிவிடுவதால் இங்கு இருக்ககூடிய வாழ்க்கை துணையின் பாதுகாப்பு உட்பட பெளதிக மற்றும் உளவியல் தேவைகளில் வெற்றிடம் நிலவுகிறது.  இந்த சந்தர்ப்பத்தில் ஒழுக்க விழுமிய கட்டுபாடுகளை பேணி வாழும் நபர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மன தடுமாற்றத்தில் தவறுகள் புரிவதும்  பிழையான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதன் விளைவாக குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தைகள் சிசுக்கொலை செய்யபட்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

2.பொதுவில் தமிழ் சமுகத்தில் பெண்கள் மறுமணம் செய்துக்கொள்வதை ஒரு ஆரோக்கியமாக பார்க்கும் கண்ணோட்டம் குறைவு. இது எமது மலையக சமுகத்திலும் விதிவிலக்கல்ல. இதில் இளம் வயதில் விதவையான பெண்கள் தனிமையில் விடப்படுவதுடன் அவர்களுக்கான தனிப்பட்ட ரீதியில் பூர்த்தி செய்ய வேண்டிய உள மற்றும் பெளதிக தேவைகள் தொடர்பில் வெற்றிடம் உருவாகிறது..  கணவன் இறந்ததன் பின்னர் பாதுகாப்பற்ற நிலையில் தனிமையில் வாடும் பெண்கள்  பாதுகாப்பு  உட்பட சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளவென அவர்களுக்கென புதிய  உறவினை ஒரு ஆணுடன் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. உறவின்  விளைவாக குழந்தை பிரசவிக்கலாம். அதே போல்  சில நேரங்களில் இவ்வாறான பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல், பலாத்காரம் என்பனவும் இடம்பெறவும் வாய்ப்புண்டு. எனவே மறுமணம் செய்யாது ஒரு விதவை பெண் கருத்தரிப்பதென்பதை சமுகம் அவதூறாகவே பார்க்கும். இவ்வாறான இக்கட்டான நிலையில் பிறக்கும் பிள்ளைகள் கொலை செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.  

3.சில நேரங்களில் ஏற்கனவே திருமணமாகி அதன் விளைவாக பிறந்த குழந்தைகள் இருக்க, குறித்த பெண் தன் கணவர் அல்லாத வேறு ஆணுடன் கொண்டிருந்த உறவினால் / கணவன் இறப்பு அல்லது விட்டுச்சென்றப்பின் கணவர் அல்லாத ஆணுடன் கொண்டிருந்த உறவினால் பிள்ளைகள் பிறக்கும் போது அதனால் ஏற்கனவே உள்ள பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் காரணமாக / தனது பிள்ளைகளுக்கு தன் மீதான மரியாதை குறைந்துவிடும் என எண்ணி பிறந்த சிசுவினை கொலைசெய்யக்கூடும்.

4.இவ்வாறு பிறந்த குழந்தைகள் சமுக இழுக்கு என கருதும் பெண்கள் தம் பெயர் கெட்டுவிடும்  மற்றும் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என கைவிடல் / கொலைசெய்தல்

5. அக்குழந்தைகளை பராமரிக்க முடியாத பொருளாதார நிலையும் எதிர்காலத்தில் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும் என்ற நிலையினால் அதனை  கைவிடல்/ கொலை செய்தல்.

6.சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அக்குழந்தைகளை கைவிடல்/ கொலை செய்தல்.

7.இவற்றோடு மனோதத்துவ நிலை அடிப்படையில் குழந்தை பிரசவித்த தாயிக்கு பிரவத்தின் பின் இருக்க கூடிய மனநிலையால் செய்யப்படக்கூடிய   சிசு கொலைகள்.

மகாத்மா காந்திஜி

 



‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். 

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார். 

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது. 

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது. 

இறப்பு

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

Saturday, 17 October 2020

நான் ஒரு ஜனாதிபதியானால்...

 


 

நான் ஒரு ஜனாதிபதியானால் எனது நாட்டிற்கு சேவை செய்வேன். என் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவேன். மத, மொழி சார்பற்ற நடுநிலையாளனாக சேவை புரிவேன். எனது தேசத்தில் அனைவரைக்கும் சம உரிமை வழங்குவேன். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிடுவேன். எனது தேசத்தை சுத்தமாகப்பேணி  அழகிய தேசமாக்குவேன். சுமூகமான சர்வதேச உறவுகளைப் பேணுவதன் மூலம் என் நாட்டை சர்வதேச ரீதியில் உயர்த்துவேன். பொருளாதார நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டு எனது நாட்டை பொருளாதார ரீதியில் செல்வந்த நாடாக்குவேன். எனது நாட்டில் வைத்தியம், கல்வி, நீதி போன்ற சேவைத்துறைகளை வளர்த்திடுவேன். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். ஏழைகளுக்கு தகுந்த உதவிகளை வழங்கி ஏழை இல்லா நாடாக எனது நாட்டை மாற்றிடுவேன். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அதனை தீர்த்து வைப்பேன். நான் ஜனாதிபதி என்றபோதிலும் ஆட்சிக்கு அப்பாற்பட்டு என் மக்களோடு சகஜமாக வாழ்ந்திடுவேன். எனது நாட்டில் நல்லாட்சிக்கு வழிவகுப்பேன். 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி

 (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)



சுப்பிரமணிய பாரதியார் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்தியவிடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப்பொருள்படும் "பாரதி" என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். 

பிறப்பு

 சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப்பருவம்

 சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். 

திருமணவாழ்க்கை

பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். 

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன. 

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். 

இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

சுதந்திரம்

  


சுதந்திரம் என்பது எவ்வித தடையுமற்று சுயேட்சையாக செயற்படுவதற்குரிய உரிமையைக் குறிக்கிறது. லிபர்(Liber) என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்தே சுதந்திரம்(Liberty) என்ற சொல் உருவானது. லிபர் என்ற சொல்லின் பொருள் "எவ்விதக் கட்டுப்பாடுமின்றி" என்பதாகும். சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளரான ஹொப்ஸ்(Hobbes) இதுபற்றி கூறுகையில் எவ்வித கட்டுப்பாடுமின்றி இருப்பதே சுதந்திரம் என்றார்.  இச்சுதந்திரத்தின் மூலமே மனிதன் தனது வாழ்வினை முன்னேற்றம் அடைந்ததாகவும் சிறப்பானதாகவும் ஆக்கிக் கொள்கிறான். அவற்றுக்கான வாய்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் பெற்றுக் கொள்கிறான். மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அவையே சுதந்திரப்போராட்டங்களாகவும் வெளி வந்துள்ளன. 


வெளித்தடைகளற்ற விதத்தில் மனிதன் தனது தனித்துவத்தை விருத்தி செய்து கொள்வதற்கான நிலைமையே சுதந்திரமாகும். சுதந்திரமானது குடியியல் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமுதாய சுதந்திரம், தேசிய சுதந்திரம், இயற்கை சுதந்திரம் என ஆறாக வகைபடுத்தப்படும்.  சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் கையாளும் வழிமுறைகளாக, சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தல், அதிகார வேறாக்கத்தை பின்பற்றல், சுதந்திர நீதித்துறையை உருவாக்கல், அரசு மதசார்பற்றதாக இருத்தல், சிறந்த கட்சிமுறை, ஒரே சட்டமுறை இருத்தல் என்பனவாகும். 


தற்கால தாராண்மை ஜனநாயக வாதிகள் வரையறைகளையும் நிபந்தனைகளையும் கொண்ட சுதந்திரத்தையே வலியுறுத்துகின்றனர். பொதுவாக சமூகத்தில் சகலருக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் சுதந்திரம் ஓரளவிற்காவது வரையறுக்கப்பட வேண்டும். அவ்வரையறைகளை விதிக்கும் அதிகாரம் அரசுக்கே இருத்தல் அவசியம். இவ்வகையில் அரசின் அதிகாரமும் சுதந்திரமும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். அரசின் சட்டங்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன. 


ஒருசாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவாது. சுதந்திரத்துக்கும் உரிமைகள் அவசியமாகும். சலுகைகள் இருப்பின் சுதந்திரம் இருக்காது. சுதந்திரத்தை பாதுகாக்க அரசு அவசியமான ஒன்றாகும். சுதந்திரம் பெறுமதி மிக்கதாகும். காலத்துக்கு காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறி வருகிறது. ஒவ்வொரு தனிப்பட்டவரின் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புபட்டதாகும். சுதந்திரம் பங்குபோடக்கூடிய ஒன்றாகும். சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது அரசேயாகும். 

உரிமைகள்

  



திருப்திகரமான குடியியல் வாழ்க்கையினையும் அரசியல் வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கு மனிதருக்குள்ள அடிப்படை நிபந்தனைகளே உரிமைகள் ஆகும். இதன்படி உரிமைகளைப் பரந்த அடிப்படையில் குடியியல்  உரிமைகள் என்றும் அரசியல் உரிமைகள் என்றும் அரசியலாளர்கள் பாகுபடுத்துகின்றனர். குடியியல் உரிமைகளை(சிவில் உரிமைகள்) பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள் என்று மேலும் பாகுபடுத்துகின்றனர். உரிமைகளின் தோற்றம் தொடர்பாக மனிதனுக்கு உரிமைகள் பிறப்பிலேயே உரித்தாகுவதாகவும், அரச சட்டங்களால் உருவாகுவதாகவும் இரண்டு  கருத்துகள் நிலவி வருகின்றன. உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவையாகும். 


குடியியல் வாழ்க்கையினை திருப்திகரமாக அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நிபந்தனைகளே குடியியல் உரிமைகளாகும். இதில் ஒரு வகையான சமூக உரிமைகள் என்பது சமூக வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளாகும். அதேபோல் பொருளாதார வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றுமொரு வகையான பொருளாதார உரிமைகள் ஆகும். அரசியல் உரிமைகள் என நோக்கும்போது அரசியல்  வாழ்வினை திருப்திகரமாக மேற்கொள்ள மனிதருக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளாகும். 

உரிமைகளை பாதுகாக்க நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகளாக அடிப்படை உரிமைகளை யாப்பில் உள்ளடக்கல், சட்டவாட்சியை உறுதிபடுத்தல், மனித உரிமை ஆணைக்குழுக்களை நியமித்தல், ஒம்புட்ஸ்மன் அதிகாரிகளை உருவாக்கல், அரசியல் அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்தல், அரசு சமயசார்பற்றதாக இருத்தல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான தொடர்பாடல் சாதனங்களை செயற்பட வைத்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். 


மனித இருத்தலுக்கு அவசியமானதும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாப்பதுமான வாய்ப்புகளே மனித உரிமைகள் ஆகும். இவை இயற்கை உரிமைகளினதும் குடியியல் உரிமைகளினதும் கலவை ஆகும். இவை உலகிலுள்ள சகல இடங்களிலும் சகல மனிதருக்கும் பொதுவானவை ஆகும். மனித உரிமைகளில் எவற்றை அத்தியாவசியமாக பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு அரசும் தீர்மானித்து அது அரசியல் யாப்பில் உள்ளடக்கும் உரிமைகளே அடிப்படை உரிமைகளாகும். இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அரசுகள் இவற்றை பாதுகாப்பதற்கு சட்ட ரீதியாக கடமைப்பட்டுள்ளன.   

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...