Tuesday, 20 October 2020

மாணவர் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் வகிபங்கு




மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக காணப்படுவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியர் மாணவர்களின் இயல்புத் தன்மை, சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.


தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் முறைகளை கையாளுகின்றார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள் வருமாறு:


விரிவுரை முறை என்பது சம்பிரதாய பூர்வமான கற்பித்தல் முறையாகும். இம்முறையானது ஆசிரியர் மையத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. ஆசிரியர் இம்முறையில் கற்பிப்பதால் மாணவர் செயற்படுவது குறைவாக இருக்கும். உயர் வகுப்புகள், செயலமர்வுகள் போன்றவற்றுக்கு இக்கற்பித்தல் முறை பொருத்தமானதாக இருக்கும். குறுகிய விரிவுரைகளை நிகழ்த்தி, அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும் பல்வேறு வரைபடங்கள் வீடியோப் படங்கள் காட்சிப்படுத்தல் போன்ற முறைகளினூடாக விரிவுரை அமையும் போது விரிவுரை வினைத்திறனுடையதாகவிருக்கும். விரிவுரை முறையினூடாக பொறுமை சகிப்புத்தன்மை அமைதி ஒத்துழைப்பு கிரகித்தல் மதிப்பளித்தல் செவிமடுத்தல், பணிவுடன் கலந்துரையாடல் போன்ற விழிமியப்பண்புகள் பிள்ளையிடம் வளர்க்கப்படுகின்றன.


குழு முறை இன்று பாடசாலைகளில் பரந்தளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறையாகும். சிறுபிள்ளைகள் சமவயதுக் குழுவினருடன் செயற்படுவதற்கு விரும்புவர். இதனால் பிள்ளைகள் ஆரம்ப வகுப்புகளில் குழுமுறையில் வகுப்புகளில் அமர்கின்றனர். 5E கற்பித்தல் முறையின் போது குழு முறை பயன்படுத்தப்படுகிறது. வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சிறு குழுக்களாகப் பிரித்து கருத்துக்களை சேகரிப்பதற்கு குழுக்களாக பிள்ளைகளை ஈடுபடுத்தல் இதன் அடிப்படை நுட்பமாகும். இக்குழுமுறையில் தேடியறிதல், ஒப்படை, விளையாட்டு என்பவற்றில் பிள்ளைகள் குழுக்களாக ஈடுபட்டு கற்பர். இதன் போது இக்குழுமுறை கற்பித்தலை மேற்கொள்ளலாம். இக்கற்பித்தல் முறையானது சிறந்த கற்பித்தல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.


வினாவுதல் முறையை பாடப் பிரவேசத்தின் போது கற்பித்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்து கொள்வதற்கும் ஆசிரியர் பயன்படுத்துவர். அத்துடன் இந்நுட்ப முறையை ஏனய கற்பித்தல் முறைகளுடன் தொடர்பு படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.


ஒப்படை வழங்கல் முறை என்பதில் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒப்படைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைக் கல்வியில் மாத்திரமன்றி ஆரம்பக் கல்வியிலும் ஒப்படை முறையை பயன்படுத்த முடியும். இது முழுமையாக மாணவரை மையமாகக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையாகும். சமகாலப் பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொள்ளுதல், அல்லது பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொள்ளுதல், செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல், விஞ்ஞானப் பாடம் தொடர்பாக அனுபவம் பெறல், போன்ற விடயங்கள் ஒப்படையாக மேற்கொள்ள முடியும்.


கண்டறிதல் முறை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையாகும். யாதாயினும் ஒரு பிரச்சினையை அல்லது சம்பவத்தை தேர்ந்தெடுத்து அது தொடர்பில் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்குட்படுத்தி அதனூடாக தேவையான பதிலை அல்லது அறிவை ஒன்று திரட்டிக் கொள்ளல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது.


விளையாட்டு முறை கற்பித்தல் முறையில் மாணவர் உற்சாகத்துடன் ஈடுபடுவர். கணிதம், மொழி, சங்கீதம் போன்ற பாடங்களை விளையாட்டு முறை மூலம் கற்பிக்க முடியும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். சிறு பிள்ளைகளுக்கான வெற்றிகரமான ஒரு கற்பித்தல் முறையாக இதனைக் கருத முடியும். வகுப்பறைக்கு வெளியில் அல்லது விளையாட்டு முற்றத்தில் இக்கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு ரீதியான அனுபவம் கிடைப்பதோடு வகுப்பறையும் பாடசாலையும் பிள்ளைகளுக்கு பிடித்தமான இடமாக மாறும்.


சிந்தனைக் கிளறல் -முறை என்பது ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மாணவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களை நிராகரிக்காமலும், திருத்தியமைக்காமலும், விமர்சிக்காமலும் இருத்தல் வேண்டும்.


வெளிக்களக் கற்கை முறையானது வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை குறிக்கும். இடை நிலை மாணவருக்கே இது மிகவும் பொருத்தமானதாகும். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வயதுக் குழுவினருக்கேற்ப பொருத்தமான வேலைத் திட்டங்களை தீர்மானித்து இவற்றை நடைமுறைப் படுத்தலாம்.


வெறும் வேடிக்கை வினோதங்களுக்காக மாத்திரம் கல்விச் சுற்றுலாக்கள் செல்லாது மாணவரின் அறிவு வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் கல்வி சுற்றுலாக்கள் அமைய வேண்டும். விஞ்ஞான ரீதியான விடயங்கள் புவியின் அம்சங்கள் வரலாறுகள் தொல் பொருளியல் சார் விடயங்கள் என்பவற்றை உயர் வகுப்பு மாணவர்களுக்கு பெருத்தமான விதத்தில் திட்டமிட்டு கல்விச் சுற்றுலாக்களை திட்டமிட்டு மாணவர் அனுபவரீதியாக கற்பதற்கு வழிப்படுத்த வேண்டும்.


நுண்முறைக் கற்பித்தல் முறையை வகுப்பறையில் கற்பிக்கும் போது விளங்காத மாணவரை, இடர்படுபவர்களை தனியாக அழைத்து உரிய பாடவிடயத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு பயன்படுத்த முடியும். இடர்படும். மாணவரை கரும்பலகைக்கு அருகில் அழைத்து ஐந்து, பத்து நிமிடங்கள் தனிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும்.


முன்வைத்தல் என்பது கற்றல் கற்பித்தல் என்பதை விட தனியாளின் ஆற்றலை அல்லது தகைமையை வெளிப்படுத்தும் ஒரு அணுகு முறையாக கருதப்படுகிறது. இது வயது வந்தோருக்கான கல்வியில் இதனை ஓர் கற்றல் முறையாகவும் பயன்படுத்த முடியும்.


போலச்செய்தல் கற்றல் கற்பித்தல் முறையில் பிள்ளை நேரடியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்வர். ஒரு செயற்பாடு நிகழ்வதை அவ்வாறே முன்வைத்தல் போலச் செய்தலாகும். அதற்கிணங்க பெறப்படும் அனுபவம் முழுமையான கற்றலாகும். இம்முறையைப் பிரயோகித்து முன்வைக்க எதிர்பார்க்கும் அறிவுத் தொகுதியானது மிகவும் வினைத்திறனுள்ளதாக அமையும்.


பிள்ளைகளுக்கு ஏதாவதோர் விடயம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இக்கற்பித்தல் முறை பயன்படுகிறது போலச் செய்தல் முறை செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதில் விருப்பமுடையவர்களாக இருப்பர். எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது சிறந்த பரீட்சை அடைவு மட்டத்தை பெறலாம்.

சூழல் மாசடைவின் இழிவளவாக்கம்

உலக சூழலியல் பிரச்சினைகளை குறைப்பதில் ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் பங்குகள் மற்றும் சுற்ச்சூழல் சார்பான மாநாடுகள் பற்றிய தொகுப்புக்கள்.


1972 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகளின் மானிட சூழல் தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்டம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

2019 இன் சுற்றுச் சூழல் மாநாடு மார்ச் மாதம்  கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. அதனுடன் கிகிரி என்ற இடத்தில் இதன் தலைமைக் காரியாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வமைப்புடன் இணைந்து சுகாதார அமைப்பு அடங்கலாக 06 வலய அமைப்புக்கள் காணப்படுகின்றன. அங்கத்துவ நாடுகளிலும் இதற்கான காரியாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் (UNEP) ஊடாக பல முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. முக்கியமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நிலையான அபிவிருத்தி முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.


எதிர்கால சந்ததியினரின் தேவையினைப் பூர்த்தி செய்வதுடன் தற்பொழுதுள்ள தேவையினை மேலும் அபிவிருத்தியடையச் செய்து சூழலைப் பேணி பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமே ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்காக காணப்படுகிறது. சூழல் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றை தேசிய அரசின் கொள்கைக்குள் கொண்டு வருதல், “அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட சிறப்பான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருவதுடன் சூழல் தொடர்புபட்ட அரச சார்பற்ற நிறுவனங்க ளோடு இணைந்தும் UNEP தொழிற் படுகிறது. அவ்வாறே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு சூழல் சார் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சுமார் 58 அங்கத்துவ நாடுகளையும் 890 செயலக காரியாலய அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. கொள்கை அமுலாக்கம் மற்றும் செயற்பாடுகள் என்பன செயலக காரியாலயத்தினால் இடம்பெற்று வருகின்றன.


நாளுக்கு நாள் தீவிரமாக மாசடையும் எம்மை சுற்றியுள்ள சூழலை பாதுகாக்கும் நோக்கில் பாரிய பங்களிப்பினை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் :- சூழல் நிலைமையினை கண்டு பிடித்தல், சூழல் சார் ஆய்வுகளை மேற்கொள்ளல், தம் நாட்டு இயற்கை வளங்களை பாதுகாக்கும் வழிவகையினை அரசுக்கு அறிவுறுத்தல், மற்றும் உலக அளவில் சூழல் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் உலக நாடுகளை ஒன்றிணைத்தல் போன்றன இவற்றின் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டித் தருவதுடன் பூகோளத்தை தாக்கும் சூழல் பிரச்சினை தொடர்பான சில சில முடிவுகளை கண்டுபிடிப்பதற்கும் அதனை முன்னெடு ப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பூகோள சூழல் பிரச்சினைகள் :-

ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சி திட்டத்தின் சுமார் 200 ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து 21 ஆம் நூற்றாண்டில் முகம் கொடுத்து வரும் சூழல் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர் அவை காலநிலை மாற்றம், காடழிப்பு (பாலைவனமாக்கம்) நீர் தட்டுப்பாடு, நீர் மாசடைவு, உயிர்பல்வகைமை பாதிப்பு, திண்ம கழிவு வெளியேற்றம். வளி மாசடைவு, உயிரியல் வட்டம் சீரழிவு, இரசாயன பொருட்கள் வெளியேற்றம், இயற்கை அனர்த்தம், புது உயிரினத் தோற்றம், மரபணு தொழிநுட்பம், கடல் மாசாக்கம், மண் தரமிழத்தல், ஓசோன்படை தேய்வு, நகரமயமாக்கம். உயர் மீன்பிடி, கடல் அலைகளில் வித்தியாசம். கடல் மட்ட உயர்வு, எல்நினோ தாக்கம், அணுக்கரு பயன்பாடு. யுத்தம் பாதிப்பு மற்றும் இயற்கை வளங்களின் அதிகரித்த பயன்பாடு போன்றனவாகும். இவ்வாறான பிரச்சினைகள் சூழலையும் சூழல் வாழ் உயிரினங்களையும் பெருமளவில் பாதித்து வருகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை UNEP மேற்கொண்டுள்ளது.

உலக சூழல் பிரச்சினையை இழிவளவாக்க UNEP மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் :-


1) மாநாடுகள் ஏற்படுத்தப்படல் :


இம் மாநாடுகளின் முதல் இலக்கு கைத்தொழிலாக்கத்தினால் சூழலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களுக்கு தீர்வுகள் தேடுவதாகும். அவ்வாறே உலகம் எதிர்நோக்கும் நடைமுறை சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுவதுமாகும்.

மானிட சூழல் தொடர்பான முதல் மாநாடு :

இம்முதல் மாநாடு 1972 சுவீடனின் ஸ்டொக்ஹொம் நகரில் இடம்பெற்றது. இதன்போது ஓசோன் படை தேய்வுக்குக் காரணமான CFC வாயு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு புவி வெப்ப நிலை அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தியது.

அருகிவரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பான மாநாடு :

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் உயிரினம் மற்றும் சர்வதேச வியாபாரம் தொடர்பாக 1973 ஆம் ஆண்டு கலந்துரையாடப்பட்டது. காட்டு வாழ் உயிரினங்களைக் கொண்டதான உற்பத்தி நடவடிக்கைகள் இம் மாநாடு ஊடாக தடுக்கப்பட்டது.

புரூண்லேன்ட் ஆணைக்குழு :

சூழல் மற்றும் விருத்திபெறும் சர்வதேச ஆணைக்குழு என்ற பெயரில் அறிமுகமான இவ்வாணைக்குழு 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வாணைக்குழு மூலம் பின்வரும் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நிலைப்பேண் அபிவிருத்தி நடவடிக்கை களை சிறப்பாக கொண்டு செல்ல நீண்டகால சூழல் பாதுகாப்பு வழிமுறை களை ஏற்படுத்தல், விருத்தியடைந்த மற்றும் விருத்தி அடைந்து வரும் நாடுகளுக் கிடையில் சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச உறவுகளை ஏற்படுத்தல் சூழல் நடவடிக்கைகளின் போது சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் இணைந்து செயற்படல், நீண்டகால சூழல் பாதுகாப்பிற்கு அறிக்கைகளை வெளியிடல் என்பனவாகும்.

மொன்றியல்_மாநாடு :

O3 படை தேய்வினை இழிவளவாக்கு வதற்காக 1987 ஆம் ஆண்டு ஐ. நா. சபையினால் நிறுவப்பட்டது.

பேஸல் மாநாடு :

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்பாக 1989 ஆம் ஆண்டு பேஸல் மாநாடு இடம்பெற்றது. இதன் மூலமாக நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் அளவு குறைக்கப்பட்டது.

மிகிதலை மாநாடு :

ஐ. நாடுகளின் சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இம் மாநாடு, புவி மாநாடு எனவும் அழைக்கப் படுகின்றது. 1992 ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெற்றது. உலகில் இடம்பெற்ற பாரிய மாநாடாகவும், 172 நாடுகள் கலந்துகொண்ட நிலையில் 108 நாட்டு தலைவர்களுக்கு மத்தியில் கியோட்டோ வாசகமும் உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


2)ஓசோன்_படையினை_பாதுகாத்தல் :


ஓசோன் படை தேய்வு என்பது குறிப்பிட்ட சில வலயங்கள் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு மொன்றியல் மாநாடு உருவாக்கப்பட்டு ஓசோன் படைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் இரசாயன துகள்களை வளிமண்டலத்துக்கு வெளிவிடும் அளவினை குறைப்பதற்காக அனைத்து அமைப்பு அங்கத்தவர்களிடமும் கோரிக்கை விடப்பட்டது.


இதன்படி CFC, ஹெலோன் வாயு, காபன் டெட்ரா குளோரைட், மெதில் குளோரோ போம், ஹைட்ரொ குளோரோ புளோரே காபன் போன்றவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என கால அட்ட வணையும் விருத்தி அடைந்த நாடுகளுக்கு பகிரப்பட்டது. அதன்படி CFC வாயு 1996 ஆம் ஆண்டிலும், Hydro UoroFloro Carbon 2030 ஆம் ஆண்டிலும் குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. இவ்வாறான வாயுக்கள் செலுத்தப்பட்ட உபகரணங்களுக்கு பதிலாக சூழல் நேய வாயுக்கள் கொண்ட உபகரணங்கள் பயன்படுத்து மாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1992 மிகிதலை மாநாட்டில் இதற்கு பகரமாக Hydro floro Carbon, Hydro Carbon, அமோனியா. ஹீலியம் போன்ற வாயுக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.


3)பச்சைவீட்டு வாயுக்களை குறைத்தல்

பச்சை வீட்டு வாயுக்களின் விகிதாசாரத் தினை குறைக்கும் நோக்கில் பல நடவடிக்கைகள் குறிப்பாக சர்வதேச அமைப்புக்கள், பிராந்திய அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு பச்சை வீட்டு வாயு தொடர்பான கருத்து சபை உருவாக்கப் பட்டது. மேலும் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலக காலநிலை சங்கத் தினால் விஞ்ஞான பரிசோதனை கொண்டு நடத்தவும் அதன் மூலம் தொழில்நுட்ப தகவல்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின் றது. உலக காலநிலை சங்கம் UNEP உலக பாதுகாப்பு சங்கம் என்பன பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான விமர்சனங்களையும் வெளியிட்டன. UNEP ஆனது பச்சை வீட்டு வாயுக்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்டு வாயுக்களை கட்டுப்படுத்தும் வழிவகைகள் மற்றும் நோய்கள் தொடர்பான ஆய்வுகள். மக்கள் விழிப்புணர்வு திட்டங்கள் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளன.

4)மழைக்காடுகளை பாதுகாத்தல் :

அயன மழைக்காடுகளை பாதுகாத்தல் என்பது எங்கு முக்கியமாக நோக்கப்பட்டது. ஐ. நாவின் சூழல் மற்றும் அபிவிருத்தி என்ற மாநாட்டில் மழைக்காடுகளை பாதுகாத்தல் காட்டு உயிரினம் மற்றும் உயிர் பல்வகைமையினை பேணி பாதுகாத்தல் என்பன முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. 1994 - 2003 வரையான காலப் பகுதியை உயிர்ப் பல்வகைமை சகாப்தமாக பிரகடனப்படு த்தியது மட்டுமன்றி இவை பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் 13 மழைக் காடுகள் பாதுகாக்க்பபட வேண்டிய பிரதேசமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. ஐவரிகோஸ்டின் டாயி தேசிய பூங்கா, பேருவின் மானு தேசிய பூங்கா, கொங்கோவின், ஸொலன் கா தேசிய பூங்கா, இலங்கையின் சிங்கராஜ வனம் என்பன உதாரணங் களாகும்.

5)மீள் காடாக்கல் தொடர்பான நிகழ்ச்சிகள் :

காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் மீள் காடாக்கல் நடவடிக்கையினை UNEP கொண்டு செல்கின்றது. சில பகுதிகளில் மழை காடுகளை பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக வேறுபடுத்தி ஏனைய மனித தேவைக்கு (பலகை) அவசியமானது காடுகள் என வேறுபடுத்ததப்பட்டு UNEP னால் இதற்கென நிதி உதவிகளும் வழங்கப் படுகின்றது. பிரேஸில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ‘புளோரும் திட்டம்’ ஊடாக 30 வருடங்களுக்குள் 30 பில்லியன் டொலரினை பயன்படுத்தி அமேசன் காட்டு அண்டிய பகுதியில் 20 மில்லியன் ஹெக்டயர் மீள் காடாக்கல் நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறே நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மீள் காடாக்கல் செயற்திட்டங்களுக்கான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. சில நாடுகளில் கனிய எண்ணெய் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் பலகை கைத்தொழி லுக்காக காடுகள் வேறாக ஏற்படுத்தப்படுகின்றன. இது மேய்ச்சல் நிலங்களுக்கு அருகில் இடம்பெறும். இது விவசாய காடாக கருதப்படுகின்றன. பர்மாவில் டொங்கியா என்ற பெயரில் பயிர் செய்கை நிலத்துக்கு அருகாமையில் தேக்கு மற்றும் பெறுமதி மிக்க மூலிகை தோட்டங்களும் இடம்பெற்று வருகின்றது.

6)பாலைவனமாதலைகட்டுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்கள் :

உலகின் அனைத்து கண்டங்களிலும் பரவி வரும் பாலைவனமாதலை தடுப்பதற்காக பல்வேறு செயல் நடவடிக் கைகள் UNEP னால் மேற்கொள்ள ப்படுகின்றன. 2010 - 2020 இடைப்பட்ட காலப் பகுதியானது பாலைவனமாதலுக்கு எதிரான சகாப்தமாக UNEP னால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மண் தரமிழத்தல் மற்றும் காலநிலை மாற்றம் என்பற்றிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் பாலைவனமாதலை தடுக்கும் வழிவகைகளை செயற்படுத்தவே இச் சகாப்தத்தின் நோக்கமாகும். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பவற்றில் அதிகளவு பாதிப்படைந்துள்ள ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் பாலைவனமாதல் தீவிர போக்கைக் கொண்டிருக்கிறது. நைரோபியில் இடம்பெற்ற UNEP யின் பாலைவன மாதல் மாநாட்டில் 20 வருடங்களுக்குள் பாலைவனமாதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு 4.5 மில்லியன் டொலர் அவசியப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. பாலைவனமாதலுக்கு உட்பட்டு வரும் 95 நாடுகள் இதில் கலந்து கொண்டதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்காக 28 நடவடிக்கைகளை அடையாளம் செய்தனர். காடுகள் ஒழித்தல், முறையற்ற முகாமைத்துவம். வரண்ட பகுதிகளில் குறைவான விவசாயம் மற்றும் குறைவான கால்நடை வளர்ப்புக்களை மேற்கொள்ளல் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

7)உயிர்பல்வகைமையை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டம் :

உயிர் பல்வகைமை தொடர்பாக ஐ.நா. சபை (1992) மனித நிலைப்பாட்டிற்கு அவசியமான பல்வகை கொண்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை பாதுகாத்து வருகின்றது.

8)ஏனைய செயற்பாடுகள் :

UNEP னால் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமன்றி ஏனைய பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. 2009 UNEP மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 4 வருட கலந்துரையாடலின் பின் சூழலுக்கு வெளிவிடும் இரசம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் நோக்கப்பட்டது. இதற்கு 144 நாடுகள் ஒத்துழைத்தன. இப்புதிய மாநாடு ‘இரசம் தொடர்பான மினமாட்டா மாநாடு” என அழைக்கப்பட்டது. உலகில் இதுவரை ஏற்பட்ட பாரிய சூழல் அனர்த்தமாக மினமாட்டா அனர்த்தத்தினை நினைவுபடுத்தும் நோக்கில் ஜப்பானில் அமைந்துள்ள மினமாட்டா நகரத்தில் 1950 களில் ஏற்பட்ட இரச மாசாக்கத்தினால் மனிதர்களுக்கு பாரியளவில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தின. ஏனவே இந்த இரசத்தினால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஒரு விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அவ்வாறே இரசம் காணப்படும் வைத்திய உபகரணங்கள், மின் உபகரணங்கள். சீமெந்து, நிலக்கரி என்பவற்றின் பாவனை 2020 ஆம் ஆண்டாகும் பொழுது நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதனூடான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் கட்டுப்படுத்த ப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. விபிழி மின்குமிழ், ஆடம்பர வாசனை பொருட்கள், உடல் வெப்பமானி, இரத்த அழுத்தமானி என்பவற்றின் பாவனை குறைக்கப்பட வேண்டும் என UNEP அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறே முருகைக் கற்பாறை அழிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கை களும் UNEP யினால் மேற்கொள்ள ப்படுகின்றது. இதற்காக கடல் மற்றும் கரையோர நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிராந்திய கடல் நிகழ்ச்சி திட்டம் என்பனவும் மேற்கொள்ளப்படு கின்றது. இதன் மூலம் கரையோர வலயங்களின் பாதுகாப்பு, கடல் உயரின பாதுகாப்பு, கடலுக்கு வெளியேற்றும் கழிவுகள் கட்டுப்படுத்தல் என்பன ஏனைய நாட்டு நிதி உதவியுடன் UNEP மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே சிரியாவின் சிவில் யுத்தத்தின் பின் அந்நாட்டு காலநிலை மற்றும் வானிலை நிலைமையினை மீண்டும் உருவாக்குவதற்கு UNEP னால் உதவி வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாரிய பயிர் நிலங்களை பாதுகாப்பதற்காக UNEP யினால் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. சுமார் 2001 ஆண்டில் 90% பயிர் நிலங்கள் சேதமடைந்திருப்பதாக UNEP செய்மதி தகவல் தெரிவித்துள்ளன. இதற்காக பயிர்நில முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. வனமுகாமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதே நோக்காக இருந்தது. இதில் சதுப்பு நிலமும் உள்ளடக்கப் பட்டிருந்தது.UNEP ஆனது பல்வேறு பட்ட துறைகளை அதாவது தொழில் நுட்பம், கைத்தொழில், வியாபாரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் அவற்றில் ஈடுபடும் மக்களுக்கு தேவையான உத்திகள், தொழில்நுட்ப அறிவு என்பவற்றினை சூழலுக்கு நேயமுள்ள முறையில் எவ்வாறு வகுத்துக் கொள்வது என்பதனையும் தெளிவு படுத்தியுள்ளது.

Monday, 19 October 2020

பொருளாதார எழுச்சி




கடந்த காலத்தில் மோசமாக வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதாரம் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் ஸ்திரநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது. மக்களை திசைதிருப்பும் விதத்தில் எதிரணித்தரப்பினர் என்னதான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் நாடு பொருளாதார ரீதியில் மேலெழுந்து வருவதை மறுக்கமுடியது. பாரிய கடன்சுமைகளுக்கு அரசு முகம்கொடுத்த போதிலும் வீழ்ந்து போயிருந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் அரசாங்கம் ஓரளவுக்கேணும் வெற்றிபெற்றே இருக்கின்றது. வளர்முக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது பொருளாதார வளர்ச்சியில் நாடு படிப்படியாக எழுச்சிபெறுவதை காண முடிகிறது.


பரவலான அபிவிருத்தித் திட்டங்கள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் திட்டமிடப்பட்ட வியூகங்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில செயற்பாடுகள் தாமதப்பட்டாலும் கூட பெரும்பாலான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டே வருகின்றன. அவற்றை பொதுமக்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் அமையப்பெற்றுள்ளது. சாதாரண மக்களது வருமானம் கூட கணிசமான அளவுக்கு அதிகரித்திருப்பதையும் மறுதலிக்க முடியாது. அரசு வகுத்த திட்டங்கள் சிரமமான முறையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.


அரச தரப்பை விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எதிரணித் தரப்புகள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி பொதுமக்களை திசைதிருப்பி ஆளும் தரப்புக்கு எதிரானதொரு பிம்பத்தை வெளிக்காட்ட முனைகின்றன. அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை என்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் எதிரணி ஈடுபட்டு வருகின்றது. ஆனால் யதார்த்தத்தை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர். என்றாலும் குறைபாடுகள் எதுவுமே இல்லை என்று கூற முற்படவில்லை,


பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் மக்களால் உணரக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை காணமுடிகிறது. குறுகிய காலத்துக்குள் கடன் சுமையில் கணிசமான அளவை திருப்பிச் செலுத்தியதோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்த அரசாங்கம், அரச ஊழியர்களு க்கு சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இந்த நிலையிலும் கூட சில தொழிற்சங்கங்கள், அரச ஊழியர்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.


கணிசமான அரச வேலைவாய்ப்புகளுடன், தனியார்துறையை ஊக்குவித்து அவற்றினூடாகவும் பெருமளவு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவித்து பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. உடைந்துபோன உள்ளங்களைக் கூட ஓட்டவைக்கச் செய்வதில் திருப்தி கொள்ளக்கூடியதாகவே உள்ளது.


மக்களின் எதிர்பார்ப்புகள் கணிசமான அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தி மக்களது மனங்களை ஈர்த்தெடுப்பதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த நிம்மதியை குறுகிய காலத்துக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இருண்ட யுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் வாழ்வினை ஒளிபெறச்செய்து மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மக்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பணியையும்கூட அரசு முன்னெடுத்தது. இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் புரிந்துணர்வான ஒரு மைல் கல்லுக்கு வந்த தருணத்தில் தீயசக்திகள் திட்டமிட்டு இனவாதத் தீயை கக்கினர். அதனையும் கூட இந்த அரசு சாதுர்யமாக முறியடித்தது. எதிர்ப்பு அரசியல் என்பது ஜனநாயக அரசியலில் ஒரு அங்கம்தான். ஆனால் அந்த எதிர்ப்பு அரசியல் ஆரோக்கியமானதாக அமைதல் வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.


அபிவிருத்தி என்பது நாட்டின் சகல பகுதிகளுக்கும் விரிந்ததாகக் காணப்பட வேண்டுமென்பதில் இந்த அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. தெற்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சமமாக மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டியதொன்றாகும். எந்தவொரு பிரதேசத்துக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது. வளங்கள் கூட சரிசமமாக பகிரப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


கடந்த காலத்தில் சகல விடயங்களும் இன ரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதன் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. காலத்துக்குக் காலம் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கூட செல்லாக் காசு போன்ற நிலையிலேயே பார்க்கப்பட்டன. இந்த முரண்பாட்டைத் துடைத்தெறிய வேண்டிய அவசியத்தை 2015ல் அரசு உணர்ந்த நிலையிலேயே சில காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முக்கியமானதுதான் வடக்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதாக அமைந்துள்ளது.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பும் அபிவிருத்தியில் பாரியதொரு மைல் கல்லாகும். வடக்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அந்த மண்ணில் பொருளாதாரப் புரட்சியொன்றுக்கு வித்திடப்பட்டுள்ளது. வடபுலத்து மக்கள் மனங்களில் ஊன்றிப்போயிருந்த விரச நிலை மாறும் யுகமொன்று உதயமாகியுள்ளது. அந்த மக்களது மனங்களிலும் நம்பிக்கை ஒளி பரவத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிக விரைவில் முழு நாடும் ஒன்றுபட்டு இது எங்கள் நாடு, எங்கள் மண் என்ற ஒத்த நிலைப்பாட்டுக்கு வரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள்

 


உரிமைகளைப் பொறுத்தவரையில் வேதனம், வருடாந்த சம்பள உயர்ச்சி, ஓய்வூதியம், விதவைகள் விதுரர் அநாதைகள் ஓய்வூதியம், அரசியல் உரிமைகள், தொழிற்சங்கஉரிமைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். முதலில் ஓய்வூதிய உரிமை பற்றிய விளக்கத்தை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஓர் ஆசிரியர் இளைப்பாறும் போது ஓய்வூதியம் பெறும் உரிமை உடையவராவார். 20 வருட சேவையை முடித்த ஆசிரியர் சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம். ஆனால் 55வயது நிறைவின் பின்னரே அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.


பெண் ஆசிரியர் 20 வருட சேவையை முடித்து ஓய்வு பெற விரும்பினால் அத்திகதியிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். சேவையின் போது அல்லது ஓய்வு பெற்ற பின்னர் ஓர் ஆசிரியர் மரணமடைவாராயின் அவரின் விதவை/விதுரர் ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோர் குறித்த ஆசிரியருக்குரிய ஓய்வூதியத்தைப் பெறும் உரித்துடையவராவார்.


அரச ஊழியரின் பிள்ளையொன்று ஊனமுற்றிருப்பின் அப்பிள்ளை தான் உயிர் வாழும் காலம் வரை தந்தை அல்லது தாயின் ஓய்வூதியத்தைப் பெறலாம். இருவரும் ஓய்வூதியம் பெறுபவர்களாயின் எவரது ஓய்வூதியம் கூடியதோ அதைனை ஓய்வூதியமாகப் பெறலாம்.


ஓர் அரசாங்க ஊழியர் குறைந்த பட்சம் 10 வருட காலம் சேவை செய்து இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் இதைப் பெற 55 வயது ஆகி இருக்க வேண்டும்.முடியுமானால் 60 வயது வரை சேவை ஆற்றலாம்.எனினும் பத்து வருட சேவையை பூர்த்தி செய்ய முன்னர் மரணமடைந்தால் துணைக்கு அல்லது அநாதை குழந்தைகளுக்கு இந்த உரித்து உண்டு. யாரும் விரும்பினால் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறலாம்.ஆனால் 55 வயதானால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஆசிரியைகள், தாதிகள்,பெண் பொலிஸ் உட்பட சில சேவையைச் சேர்ந்த பெண் அரசாங்க ஊழியர்கள் 20 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றாலும் உடன் ஓய்வூதியம் கிடைக்கும்.


மரணப்பணிக்கொடை:


ஓர் அரச ஊழியர் சேவையின் போது மரணமடைந்தால் மரணப் பணிக்கொடை வழங்கப்படும். அது சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 5வருடத்திற்குட்பட்ட சேவைக் காலம் எனின் ஒருவருட சேவைக்கு ஒருமாதச் சம்பளம் என்ற அடிப்படையிலும், சேவைக்காலம் 5 தொடக்கம் 10வருடத்திற்குட்பட்டதாயின் ஒரு வருடச் சம்பளம், சேவைக்காலம் 10வருடத்திற்கு மேற்பட்டதாயின் கடைசி மாதச்சம்பளத்தின் 90வீதத்தின் 24 மடங்கு ஆகும். 30 வருட காலம் சேவை செய்து இருந்தால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 75% தொடக்கம் 85% குறைக்கப்பட்ட ஓய்வூதியம் (ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றால் கிடைக்கும் . இது சம்பளத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். 13280/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 85%தையும் 37805/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருப்பவர் 75% ஐயும் ஓய்வூதியமாகப் பெறுவார்.அத்தோடு வாழ்க்கைச் செலவுப்படி 3525/= ,விசேட படி 3500/= மேலதிகமாகக் கிடைக்கும்


30 வருட காலச் சேவைக் காலம் இல்லாவிட்டால் 6 மாத காலத்துக்கு 1% குறையும் .20 வருட சேவைக் காலமாக இருந்தால் 10 வருட காலக் குறைவுக்கு 20% குறையும். ஒரு மாதத்துக்கு 0.2% குறையும். ஓய்வூதியப் பணிகொடையைப் பெறாவிட்டால் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 90% தொடக்கம் 85% குறைக்கப்படாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதன் 24 மாதப் பெருக்கமே பணிக்கொடை ஆகும். ஒருவர் 16,000/= சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதன் 90% மானது 14,400/= ஆகும். இதன் 24 மாதப் பெருக்கத் தொகையான 3,45,600/= ஓய்வூதியப் பணிகொடையாகக் கிடைக்கும்.


அரசியல் உரிமை:

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமை இல்லை. இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES), மற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் (SLPS) 1 க்கு இவ்வுரிமை இல்லை. ஆனால் இலங்கை ஆசிரியர் சேவையைச் (SLTS) சார்ந்தவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு.அதேவேளை அதிபர் சேவைதரம்2 இற்கும் உண்டு. அரசியல்உரிமை எனும் போது அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறும் உரிமை, அரசியல் கட்சிகளை உருவாக்கும் உரிமை,அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் உரிமை,அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


ஓர் ஆசிரியர் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம், பிரசாரம் செய்யலாம், கருத்துத் தெரிவிக்கலாம், துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுலோகங்கள் கட்டுரைகள் எழுதலாம், பிரசுரம் செய்யலாம்,பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியிடலாம்.


ஆசிரியர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக இறங்கவிரும்பினால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு ஒருவாரம் முன்பதாகவே விடுமுறையில் செல்ல வேண்டும். இதற்காக அவர் வேட்புமனுத்தாக்கலுக்கு ,10நாட்களுக்கு முன்னதாக அதிபருடாக வலயக்கல்விப்பணிப்பாளருக்கு, எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். வெற்றிபெறும் பட்சத்தில் பதவியிலிருந்து இளைப்பாற்றப்படுவார்கள். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இளைப்பாற வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தொழிலோடு, உள்ளூராட்சி பதவியையும் ஆற்றுவதற்கு உரிமையுண்டு. அச்சேவையை ஆற்ற முழுச்சம்பளத்துடன் கூடிய விடுமுறையுண்டு. வழமையான இடமாற்ற நடைமுறையிலரிருந்து அவருக்கு விலக்களிக்கப்படும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவாராயின் தேர்தல் திகதியிலிருந்து தான்வகித்த பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்படுவார்.


தாபனவிதிக்கோவையின்படி(E.CODE) அரசியல்உரிமை இல்லாதவர்கள் எந்தத் தேர்தலாயினும் தமது வாக்குகளை அளிக்கின்ற உரிமை உள்ளது. அதைத் தவிர ஏனைய அரசியல்நடவடிக்கைகளில் பங்குபற்ற உரிமைகள் இல்லை. ஓர் ஆசிரியர் தனது கடமைகளை சரிவரச் செய்த பின்னர், திணைக்களத் தலைவரால் மறுக்கப்பட முடியாதவை உரிமைகளாகும். அதற்கப்பால் சில வசதிகள் உள்ளன. அவற்றை சலுகைகள் என்போம்.

மலையகத்தில் இறை நம்பிக்கை



இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு, இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களே மலையக மக்கள் என அழைக்ஙப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்டவர்களே. இவ்வாறு வந்த மக்கள் தங்களது உடைமைகளுடன் உறவுகளுடன் அங்கு பேணி பாதுகாத்து வந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் சுமந்து வந்தனர். 


ஆங்கிலேயரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்கு முறையாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட  இவர்கள் அவ்வப்போது அந்த கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களையும் மீட்டிப்பார்த்தனர். அவ்வாறு மீட்டியவையே இன்றும் புழக்கத்தில் உள்ள கூத்துக்களும் சடங்குமுறைகளும். அன்று ஆறு மணி ஆகிவிட்டால் எல்லா வீடுகளிலும் புராண கதைகளும், கூத்து பாடல்களும் முழங்கிக் கொண்டிருக்குமாம். இவைகள் எம் மக்களுக்கு இன்பத்தையும் மன அமைதியையும் அள்ளித்தந்தது. மலையகத்தில் எமது முன்னோர்கள் எமக்கு அளித்த கலைகள் பல உள்ளன. அவையாவன பொன்னர் சங்கர் கூத்து, காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, நல்ல தங்கால் கதை வீரபத்திரன் ஆட்டம், காட்டேரியம்மன், லவ குசா என்பன. 


காட்டேரியம்மன் 


அன்றைய கால மனிதன் இயற்கை கூறுகளால் வரும் பாதிப்புக்களை தடுப்பதற்க்காக நீர், நெருப்பு, மரம், கல் என இயற்க்கையுடன் சார்ந்தவைகளை கடவுளாக எண்ணி வழிபட்டான். அவ்வாறு மழையை வேண்டியும் மழையினால் வரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டியும் மாரியம்மனை வழிபட்டனர். இவ் மாரியம்மனின்  அவதாரங்களில் ஒன்றுதான் இந்த கரிய நிற தோற்றமுடைய காட்டேரியம்மன். 


இலங்கை திருநாட்டில் இயற்க்கை எழில் மிகு நுவரெலியா மாவட்டத்தில் தேயிலை மலைகளும் கலை கலாச்சாரமும் கலந்த அழகிய கிராமம் தான் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டம். மலையகத்தின் தனித்துவம் மிக்க கலைகளான காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, காட்டேரியம்மன், குறவஞ்சி ஆட்டம், காவடி, கோலாட்டம் போன்றவை இவ்வூரில் இன்றும் உயிர்ப்புடன் இயங்குவதை காணலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான ஒன்றுதான் காட்டேரியம்மன் திருவிழா.


இந்தியாவில் இருந்து வருகை தந்த பெருந்திரளான கூழித்தொழிலாளர்களில் பெரம்பலூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் லிந்துல சென்றகுலர்ஸ் தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இன்றும் இந்தியாவின் பெரம்பலூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலேயே இந்த காட்டேரியம்மன் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் சென்றகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரமே காட்டேரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்றைய வழிபாட்டு முறை 


பங்குனி மாதம் என்றாலே அது திருவிழா மாதம் தான் எல்லா ஊர்களிலும் 5 நாள் 7 நாள் என குதூகலமாக இருக்கும். கொடிமரம் நட்டு, கரகம் பாலித்து, பாற்குட பவணி, உள்ளூர் வளம், வெளியூர் வளம், மஞ்சள் நீராட்டு விழா என பயபக்தியாக காணப்படும். அதேதான் இந்த சென்றகுலர்ஸ் தோட்டத்திலும் திருவிழா காலம் ஆரம்பித்து விட்டால் போதும் சுற்றியுள்ள அத்தனை ஊருக்கும் இன்ப மழை தான். திருவிழா ஆரம்பத்தின் பின்னர் என்னவாக இருந்தாலும் சரி செவ்வாய்க்கிழமையை காட்டேரியம்மனுக்காக ஒதுக்கி விடுவர். ஆம் பங்குனி மாதம் திருவிழா ஆரம்பித்து செவ்வாய்கிழமை தான் காட்டேரியம்மன் திருவிழா நடைபெறும். 


திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காட்டேரியம்மன் வேடம் தரிப்பவர் பிறந்த மேனியுடன் சுடுகாட்டிற்கு செல்வார். அங்கு சென்று காட்டேரியம்மனுக்கு சூடம், தேசிக்காய், பால், முட்டை என்பவற்றை படையல் வைப்பார். படையல் வைத்து வழிபட்ட பின்னர் காட்டேரி வேடம் தரிப்பவருக்கு அருள் வரும். காட்டேரியம்மன் ஆற்கொண்ட பின்னர் அம்மன் தெரிவு செய்த இடத்திலிருந்து சுடுகாட்டு மண்ணை எடுத்துக்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்து மண்ணை ஒழித்து வைப்பார். அதன் பின்பு குழுவில் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு இந்த மண்ணை பெற்று சலித்து காட்டேரியம்மனுக்கு வீட்டினுல் படைத்து வேடம் தரிப்பவரின் அணிகளனுடன் வைப்பார். 


பின்பு காட்டேரி வேடம் தரிப்பவர் வேடமணிந்து தயார் நிலைக்கு வருவார். அப்பொழுது கரிய நிறவுருவம்,கருமை நிற உடைகள்,வெளிதள்ளிய நாக்கு, ரத்தம் தோய்ந்த உதடுகள்,கோரைப்பற்க்கள், தலைவிரி கோலம், கையில் சுலகு,காலில் சதங்கை என காட்டேரி அச்சமூட்டும் தோற்றமளிப்பாள். அதேபோல் எதிரணியாகவும் அரக்கர்களாகவும் தயார் நிலையில் இருக்கும் ஒன்பது அல்லது பதினொரு பேர் கொண்ட குழுவினர் மிகவும் கருப்பாகவும், உடல் முழுவதும் கருப்பு நிற அரிதரம் பூசி, கருப்பு நிற கால்சட்டை அணிந்து, காலில் சதங்கை, தலையில் கருப்பு துண்டு கட்டி,கையில் உலக்கை ஏந்தியும் காட்சியளிப்பர். 


வீட்டினுள் காட்டேரி வேடம் தரித்தவர்க்கு படையல்கள் வைத்து சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த மண் உணவாக கொடுக்கப்படும் அதனை சாப்பிட சாப்பிட காட்டேரியின் அருளும் கோபமும் உக்கிரமடையும். இதனை தொடர்ந்தே தனது விளையாட்டையும் ஆட்டத்தையும் ஆரம்பிப்பாள் காட்டேரித்தாய். காலை 11 மணியளவில் ரோதமுனி ஆலயத்தில் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் காட்டேரியம்மனோடு சேர்ந்து எதிரில் உள்ள உலக்கை ஏந்திய குழுவினரும் இசைக்கு ஏற்றாற் போல் ஆடுவர். இங்கு பிரதான இசைக்கருவியாக தப்பு பயன்படுத்தப்படுகின்றது. காட்டேரியம்மனானது உலக்கை ஏந்தி ஆடுபவர்களை துஸ்டர்களாக எண்ணி, அவர்களை விரட்டியடிப்பது தீமையை விலக்கி நன்மை பெருக்குவதாக அமைந்துள்ளது.  மேலும் காட்டேரியம்மன் ஒரு உயரமான மலையில் வாழ்வதாகவும் அதனை இடிக்க துஸ்டர்கள் உலக்கையை காட்டுவதாகவும் அவர்களை விரட்டியடிக்கவே காட்டேரியம்மன் அவதரித்ததாகவும் ஊர் மக்கள் நம்புகின்றனர். 


மேலும் காட்டேரியம்மன் தப்பிசைக்கு ஏற்றவாறு சுலகை விசுக்கி விசுக்கி ஆடி வருவார். எதிரணியில் உலக்கை வைத்துள்ளஒருவர் " பச்சொலக்க " எனக்கூற அணியில் உள்ள ஏனையோர் " பாரமில்லை " என கோசமிடுவர். "பச்சொலக்க பாரமில்லை" என்ற கோசம் கேட்டவுடன் அம்மனுக்கு கோபம் உச்சமடையும். காட்டேரியம்மனை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்துக் கொள்வதற்க்காக இடுப்பில் துணி ஒன்றை கட்டி பின்னால் இருந்து இழுத்து இழுத்து விடுவர். மேலும் சுற்றியுள்ள பக்தர்கள் ஓஓ.....ஹாஹாஹா என கோசமிடுவர். சுமார் 3 மணித்தியால ஆட்டத்தின் பின்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்து இறுதியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் இந் நிகழ்வு நிறைவு பெறுகிறது. 


ஆரம்பக்காலத்தில் வருகைதந்த கருப்பண்ணன் கவுண்டர் முதல் மாயழகு புஷ்பராஜ் தலைமுறை வரை சுமார் 6 தலைமுறைகள் தொடர்ச்சியாக இன்று வரை இந்த நாடக பண்புடைய சடங்கை செய்து வருகின்றனர். ஊர் நன்மைக்காகவும், ஊரின் காவலுக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் இந் நிகழ்வு நடைபெறுவதாக சென்றகுலர்ஸ் தோட்டத்தை சேர்ந்த கலைஞர்களாகிய சுப்பிரமணியம் ராசு, நல்லு பெரியசாமி என்போர் தெரிவித்தனர். 

மேலும் காட்டேரியம்மனை கருப்பண்ணன் கவுண்டர் குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டுள்ளனர். இந்நிகழ்வின் அரங்க வெளியாக தெரு வீதி பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பலர் நேர்த்தி இட்டு காட்டேரியம்மனை வழிபடுவர். இவ்வளவு காலமும் முறையாக பேணப்பட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த சடங்கு முறை எதிர்காலத்திலும் எந்த வித தொய்வும் இன்றி சீரும் சிறப்புமாக செயற்பட வேண்டும். 


ஒரு இனம் அழிக்கப்பட வேண்டும் என்றால் அந்த இனத்தை போர் ஆயுதங்கள் கொண்டு தாக்க வேண்டிய, அழிக்க வேண்டிய அவசியமில்லை அவர்களின் கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை சீர்குலைத்தால் போதும் அந்த இனம் தானாக அழிந்து விடும். இவ்வாறு ஒருகாலமும் நடக்கக்கூடாது. எனவேதான் எமக்கு எமது கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பேணி பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை உள்ளது.

முதியோர்களின் சமூக பாதுகாப்பு

 


கடந்த 01.10.2020 நாளன்று உலகளாவிய ரீதியல் முதியோர் தினத்தை கொண்டாடப்பட்டதை தொடர்ந்து மிக முக்கியமாக பேசப்பட்ட விடயம் யாதெனில் “உலக சனத்தொகை மதிப்பீடுகளின் படி 21ஆம் நூற்றாண்டு முதியோர்களின் ஆண்டாக கருதும் அதே நேரத்தில் அண்மைய மதிப்பீடுகளின் படி இலங்கையிலும் 2041 ஆம் ஆண்டளவில் முதியோர்களின் எண்ணிக்கையானது தற்போதைய அளவிலும் பார்க்க 2 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்பதாகும். இவ்வாறான நிலையில் இவ் முதியோர்களின் சனத்தொகை அதிகரிப்பு வீதமானது எதிர்காலத்தில் நாட்டின் அரசியல், சமுக, பொருளாதாரத்தில், மாற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளை முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு, சாதகமான சமுக சூழல் போன்ற பிரதான அம்சங்களில் முதியோர்களின் நிலைமை தொடர்பில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இவ் எதிர்காலத்திலத்திற்காக இவ் நிகழ்காலத்திலே முன்னெடுக்க வேண்யுள்ளது.  


ஆனால் இவ்வாறான எதிர்கால நிலமை குறித்து சிந்திப்பதிலும் பார்க்க இன்றைய நிலையில் நாடளவிய ரீதியில் முதியோர்களின் சமுக பாதுகாப்பு என்பது கேள்விக்குரியான நிலையிலே உள்ளது எனலாம். காரணம் நாம் ஒவ்வொருவரும் தினசரி நாளொன்றில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் பொதுவெளியில் அநாதரவாக கிடக்கும் எத்தனையோ முதியோர்களையும் வருமான வழியின்றி நடைபாதையில் யாசகம் பெறும் முதியோர்களையும் தங்குமிட வசதிகள் இன்றி இரவு பொழுதுகளை பொது இடங்களிலும் நடைபாதைகளிலும் கண்ணீருடன் கழிக்கும் முதியோர்களையும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மன ஆதகங்களை எங்களிடையே கொட்டி தீர்க்கும் எண்ணிக்கையற்ற எத்தனையோ முதியோர்களையும் கடந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் பாலின அடிப்படையில் ஆண் முதியோர்களிலும் பார்க்க பெண் முதியோர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதே எனலாம். காரணம் ஆண்கள் என்பதிலும் பார்க்க ஒப்பீட்டளவில் பெண்களுக்கே உடல், உள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ரீதியான தேவைப்பாடுகள் அதிகமானதாக காணப்படுகிறது.  


அந்த வகையில் பெண் முதியோர்களுக்கு தற்காலத்தில் எவ்வாறான சமுகபாதுகாப்பின்மை நிலவுகிறது என்பதையும் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான காணப்படும் சட்ட மற்றும் சமுக நல ஏற்பாடுகள் குறித்தும் பின்வருமாறு சுருக்கமாக ஆராயலாம்.

பின்வருவன பெண் முதியோர்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக மட்டத்தில்  எதிர்நோக்கும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன. 


1. பிள்ளைகளால் கைவிடப்படல் : இன்றைய நவீன காலத்தில் தனிப்பட்ட சுதந்திரம், குடும்ப பொருளாதார நெருக்கடி போன்ற இன்னோரான காரணிகளால் கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை அருகி வரும் நிலையலில் பெருமளவிலான பெற்றோர்கள் தன் பிள்ளைகளால் முறையான பாராமரிக்கப்படாமலும் சில நேரங்களில் கைவிடப்பட்டும் விடுகின்றனர். எனவே தங்களது அடிப்படை தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அநாதரவாக்கப்படுகின்றனர்.


2. குடும்ப வன்முறை : பெருமளவிலான பெண் முதியோர்கள் தங்கள் பிள்ளைகளாலும் ஏனைய குடும்ப உறுப்பினர்களாலும் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.


3. மோசடியானஃ பிறழ்வான முறையில் ஆவணங்களில் பெற்றுக்கொள்ளும் கையொப்பங்களினூடாக சொத்துக்களை சூறையாடல் : இவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது. பெரும்பாலான முதியோர்கள் கல்வியறிவு மற்றும் விழ்ப்புணர்வு குறைவாகவும் பிள்ளளை பாசம் போன்ற உணர்ச்சி நிலை மிகுந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் எமது முதியோர்களில் அநேகமானோர் குறித்த ஆவணங்களை வாசித்து விளங்கி கொள்ளாதும் சில நேரங்களில் வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலும்; வெற்று கடதாசிகளில் கையொப்பங்கள் ஃ கைவிரல் அடையாளங்களை இடுவதுண்டு. இவ்வாறான முறைகளினூடாக பெற்ற பிள்ளைகளால் மட்டுமன்றி பிற நபர்களாலும் சொத்துக்களை சூறையாடும் நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இச் சந்தர்ப்பங்களில் மோசமான பின்விளைவுகளை அறியாது செயற்படுவதினால் முதியோர்கள் தங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுதல் முதலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். 


4. முதியவர்கள் புத்திசாலித்தனமற்ற வகையில் சொத்துக்களை வழங்குவதும் பின் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படலும் : பெண் முதியோர்கள் பெரும்பாலும் தமது சொத்துக்களை பிள்ளைகளின் மேல் உள்ள பாசம் , நம்பிக்கை அடிப்படையில் எவ்வித நிபந்தனைகள் இன்றி தாங்கள் வாழும் வரையான காலப்பகுதியல் அதனை அனுபவிக்கும் உரிமையை தம்மிடம் வைத்துக்கொள்ளாது அவர்களுக்கு முழுவதுமாக கையளித்தோ ஃ நன்னொடையளித்தோ விடுகின்றனர். ஆனால் பின்னரான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகள் சொத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பெற்றோர்களை கைவிட்டுவிடுவதுண்டு.


5. தொழில் இடங்களில் சம்பள மோசடி : இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ முதியவர்கள் வயது முதிர்ந்த காலத்திலும் வயிற்று பிழைப்பிற்காக தொழில் செய்து வருகின்றனர். ஆனால் சில தொழிலிடங்களில் அவர்களக்கான உரிய கொடுப்பனவுகளை கொடுக்காது மோசடி செய்யப்படுகின்றனர்.


6. அடிப்படை வசதிகளை வசதிகள் இன்றி வாழ்தல் :இன்றைய காலக்கட்டத்திலும் உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் தங்களுக்கென சொந்த அல்லது தற்காலிக தங்குமிட வசதிகள் இன்றி; பல முதியோர்கள் நிர்க்கதியாய் இருக்கின்றனர்.


7. கடுமையான அங்கவீனமுற்ற நிலையில் மருத்துவ வசதிகளை பெற்றுக்கௌ;ள முடியாது நோய்நிலைகளை எதிர்நோக்கும் பெண் முதியோர்கள் : குணப்படுத்த முடியாத மற்றும் குணப்படுத்தக்கூடிய நோய் நிலைமைகளை கொண்டிருக்கும் சில முதியோர்கள் அதற்கான மருத்துவ செலவீனங்களை பெற்றுக்கொள்ள முடியாது உதவிகளுக்கு ஆதரவின்றி போரடியும் வருகின்றனர்.

மலையகப் பெண்களும் பாராளுமன்றமும்

அண்மையில் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வரும் ஒரு தொணிப்பொருள் பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது சவால் மிக்கதொரு பயணம்”. உண்மையில் பெண்களுக்கான பிரத்தியேக உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் பிரத்தியேக பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை முன்வைப்பதற்குமான ஒரு அதிகாரம் பொருந்திய பெண் தலைமைத்துவம் அவசியமானதாகும். இதன்படி இலங்கையானது ஆசியாவின் நீண்டதொரு அரசியல் கலாசாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதுடன் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆண்களும் பெண்களும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகளை உடையவர்கள். ஆனால்; அரசியல் உரிமைகளை பொருத்தவரை பெண்கள் இரண்டாம் தர பிரஜைளாகவே கருதப்படுகின்றனர். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம் (பாராளுமன்றம், மாகாணசபை, ஏனைய உள்ளுராட்சி தாபனங்கள்) மிக குறைவான வீதத்திலும் சவால்நிலைக்குட்பட்டதாகவும் நிலவுகிறது. இதற்கு எமது மலையக பிரதேசமும் விதிவிலக்கல்ல. இது குறித்து பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.


மலையகத்தை பொருத்தவரை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் இரத்தினபுரி, கேகாலை (மலையகம் என்பது தேசிய ரீதியில் பரந்துபட்டது. கட்டுரையின் நோக்கத்திற்காக தேர்தல் மாவட்டங்கள் சுட்டிகாட்டப்பட்டுள்ளது) பிரதேசங்களிலிருந்து பெண்களின் பாரளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கிறதென்பது வெளிப்படையான நிதர்சனம். இலங்கையில் 1931 ஆம் ஆண்டில் முதல் பெண் பாராளுமன்ற பிரவேசத்திலிருந்து தற்போது (2020) வரை 20 ற்கும் குறைவான பெண்களே தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் முறைமையினூடாக மலையகப் பிரதேசத்திலருந்து பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளனர். அவ்வாறு மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற அங்கத்துவம் வகித்த பெண்கள் சிலர்: 

நுவரெலிய -னுரரெவாடையமய ஆரனலையளெநடயபந சுநரெமய ஆநnமைந ர்நசயவா (21ஃ07ஃ1977 -20ஃ12ஃ1988 இ15ஃ02ஃ1989 -18ஃ08ஃ2000)இ

 கண்டி -வுயஅயசய முரஅயசi ஐடயபெயசயவநெ 06ஃ1949 - 08ஃ04ஃ1952, பதுளை- ர்நஅய சுயவயெலயமநஇ இரத்தினபுரி - ளுரசயபெயni ஏளையமய நுடடயறயடய.


இதில் வெளிப்படையான விடயம், பல்லினம் சமுகம் கொண்டதும் நாட்டின் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய மலையக பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சார்ந்த பெண்களே தவிர மலையக பிரதேசத்தின் சிறுபான்மை இனத்திலிருந்து எந்தவொரு பெண்களும் தெரிவு செய்யப்ட்டிருக்கவில்லை. 

அப்படியிருக்க இதுவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றிருக்கவில்லை எனினும் அதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளவில்லையென குறிப்பிட முடியாது. அதாவது மலையகத்தில் சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்டம் வரையில் மாத்திரமே வந்துள்ளனரே தவிர வெற்றிபெரும் கட்டத்தினை இதுவரை எட்டியிருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். காரணம் நடைமுறையில் மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சவாலுக்குரியதாக காணப்படுகின்றமை.

இவ்வாறு மலையக பெண்களின் பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரவேசம் சந்தர்ப்பம் சவாலுக்குரியதாகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றது. 


1. அரசியலில் ஆணாதிக்கமும் கட்சி அரசியலும்

மலையக அரசியல் கட்சிகளை பொருத்தவரை, அவற்றில் பெண் உறுப்பினர்களை விட கூடுதலாக ஆண் உறுப்பினர்களே உள்ளனர். தேர்தலில் களமிறங்கும் போதும் கட்சி ரீதியாக / சுயேட்சை குழு அடிப்படையிலோ போட்டியிடுவதிலும் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களே அதிகம். ஆக பொதுவெளியில் மலையக அரசியல் ஒரு ஆணாதிக்க அரசியலாகவே தோற்றமளிக்கின்றது.

மேலும் பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகளில் பொதுவாக பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதும் அவற்றோடு; சாதாரண பின்னனி கொண்ட பெண்களை கட்சியில் உள்வாங்குவதும் மிக குறைவாகும். பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு கொண்ட கட்சியின் கொள்கைகளோடு முரண்படாது செல்லும் பெண்களை ஓரளவு உள்வாங்கியுள்ளது. இதிலிருந்து விடுத்து சுயேட்சையாக பெண்கள் தேர்தலில் களமிறங்கினாலும் (தேர்தலின் போது/முன்/பின்) ஆணாதிக்க சமுகத்தால் அவர்களுக்கெதிராக பின்வரும் இரு வழிமுறையிலான வன்முறைகளை சமீப காலத்தில் கட்டவிழ்க்கப்ட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

1. குறித்த பெண்வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் முன்னேற்பாடாக அவர்கள் தொடர்பான பிழையான எதிர்மறை எண்ணங்களை (நடத்தை கெட்டவள், ஊழல் செய்பவர், திறமையில்லாதவர் போன்ற எண்ண கருக்கள்) மக்கள் மனதில் நேரடியாக ஃ மறைமுகமாக விதைத்தலும் குறித்த நபருக்கு அதனூடாக மன உளைச்சலை ஏற்படுத்தலும்.

 

2. பெண்களுக்கெதிராக முரட்டுத்தனமான வன்முறைகளை கட்டவிழ்த்தல் (உடல் ஊறு, ஆதன தீங்கு ஏற்படுத்தல், தாக்குதல்கள், அச்சுறுத்தல்)


2.மலையக பெண்களுக்கு அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் இன்மையுடன் கூடிய அசமந்த போக்கு. ஆர்வம் உடையவர்களுக்கு போதியளவிலான வலுவூட்டல்களும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப்பெறாமை.


3.அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மலையக பெண்களுக்கு போதியளவிலான விழிப்பணர்வின்மையும் அரசியல் அறிவு மட்டம் குறைவாக காணப்படல்.


4.மலையக பெண்களின் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுக கலாசார சூழல் காரணிகள்.

5.மலையக பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் மக்களிடையே குறிப்பாக சக பெண்களிடையே கிடைக்கின்ற வரவேற்பு, ஊக்கமளிப்பும் கூடிய ஆதரவும் மிக குறைவு. 


6.கட்சிகளில் பெண்களுக்கு போதுமானளவு இட ஒதுக்கீடு வழங்கப்படாமை.


7.கட்சி தவிர்த்த சுயேட்சை குழுவில் போட்டியிட்டாலும் அது போதியளவு அதிகார வலுப்படுத்த படாமை.


8.மலையகத்தில் தடைகள் தாண்டி தேர்தல் சவாலை வென்றெடுக்கும் அளவுக்கு ஆளுமையை வளர்த்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை குறைவு. சில பெண்கள் பாராளுமன்ற பிரவேசத்திற்கு முயற்சித்தாலும் பொதுவெளியில் அவர்களின் ஆளுமையில் திருப்தி அடையாத மக்கள் வாக்களிப்பதில்லை. 


9.ஆளுமையும் அரசியல் அறிவும் உடைய பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட, பிரச்சாரம் செய்ய போதியளவு பண பலம் இல்லாமை.


10.இருப்பினும் வெறுமனே பண பலமும் அரசியல் பக்க பலமும் கொண்ட பெண்களுக்கு ஆளுமை விருத்தியுடன் முன்னேற்றகரமான அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்க முடியாமல் இருத்தல். இதுபோன்ற இன்னோரான காரணங்களை குறிப்பிட முடியும். 


இவ்வாறான சாவால்கள் எதுவாக இருப்பினும் மலையக பெண்களின் பாராளுமன்ற பிரவேசத்திற்கான நடைமுறையிலான சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா? என்றால் நிச்சயம் 100 க்கு 75ம%  மேலான வீதமான வாய்ப்புக்கள் பின்வரும் குறிப்பிடும் விதத்தில் உள்ளது.  


1. மலையகத்தில் தொழிற்சங்கங்களே அரசியல் கட்சிகளாக செயற்பட்டு வரும் வித்தியாமான போக்கு காணப்படும் நிலையில் மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலே ஆண்களை விட அதிக எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்களே; ஈடுபடுவதுடன் தொழிற் சங்கத்திற்கும் பெண் தொழிலாளிகளின் சந்தா பணமே கூடுதலாக கிடைக்கப்பெறுகிறது. இதன்படி அதிகளவிலான பெண்களே தொழிற்சங்க உறுப்பினராகவும் உள்ளதுடன் சந்தா பணம் அதிகளவு பெண்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அதே விகித அடிப்படையில் பெண்களுக்கு கட்சியில் அங்கத்துவம் வழங்கப்படுகிறதா என்பது கேள்வி? 


ஆக தொழிற் சங்கத்திற்கு ஆண்களிலும் பார்க்க பெண் தொழிலாளிகளினால் சந்தா பணமே கூடுதலாக செலுத்த முடியுமாக இருக்க கூடிய நிலையில், ஏன் அவ் தொழிற்சங்க பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பெண்களுக்கான தனி ஒரு தொழிற்சங்கத்தினையும் கட்சியினையும்; உருவாக்கி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிட முடிமான சந்தர்ப்பம் உள்ளது.


2. மலையகத்தினை பொருத்தவரை 1ஃ3 பங்கு பெண்களே பெருந்தோட்ட துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய தொழிற் துறையில் (சட்டம், மருத்துவம, பொறியில், வர்த்தகம், ஏனைய நிர்வாக மற்றும் ஆசிரியர் துறை) ஈடுபட்டு வரும் பெண்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் மலையகத்தில் எந்தவொரு தொழிற்சங்களோ ஃ அமைப்புக்களோ இதுவரை உதயமாகியருக்கவில்லை. எனவே அவர்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்புக்களை ஃ தொழிற்சங்களை உருவாக்கி அப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம்.


3. மேலும் மலையக தேர்தல் கலாசாரத்தில் ஒரு ஆண் வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களுக்கு பெண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆண்கள் சார்பில் அதிகமான வாக்குகள் அளிக்கப்படுவதில்லை. காரணம் ஆண்கள் மட்டும் சமவாய்ப்பு சிந்தனையை செயற்படுத்துவதில்லை. அப்படி சமவாய்ப்பு சிந்தனையை சிந்திப்பார்களாயின் நிச்சயம் பெண் பிரதிநிதித்துவம ஒன்றினை பெறலாம்.


4. மேலும்; ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் யாதெனில் கடந்த காலத்தில ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மலையகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவை களமிறக்கியப்போதும் அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கமில்லாத தன்மையினாலும் கேலி கிண்டல்களுக்கு உட்பட்டதுடன்; அப்பெண் குழுவுக்கு சரியான வலுவூட்டல் இல்லாமையால் தேர்தலில் தோல்வியும் கண்டனர். ஆக சரியான அரசியல் வலுவூட்டல்களை வழங்குமிடத்து பெண்களும் பிரதிதநிதித்துவம் பெறலாம்.


இவ்வாறான சாத்தியப்பாடுகள் இருப்பினும் அரசியல் மட்டத்திலும் சமுதாய மட்டத்திலும் இது குறித்து சிந்திப்பது மிக குறைவாகும். இவற்றோடு பின்வரும் சமுக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதினூடாக நிச்சயம் மலையக பெண்களின் நாடாளுமன்றத்திற்கான பிரவேசத்தினை உறுதிபடுத்த முடியும்.

1. மலையக அரசியல் கட்சிகள் சந்தா பணம் பெறும் விகிதத்திற்கேற்ப பெண்களுக்கான அங்கத்துவ இட ஒதுக்கீடு தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.


2. மலையகத்தில் எத்தனையோ படித்த, பகுத்தறிவுடன் சிந்திக்க கூடிய அரசியல் அறிவு கொண்ட பொது நலனுடன் செயற்படக்கூடிய ஆளுமை கொண்ட பெண்கள் உள்ளனர். இவர்களை ஒன்றினைத்து அரசியல் துறையில் சரியான வலுவூட்டல்களை வழங்க வேண்டும்.


3. மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சி திட்டங்களை பிராந்திய ரீதியல் மலையகத்தில் செயற்படுத்த வேண்டும்.


4. மலையக ஆணாதிக்க சமுகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான விடயங்களை முறையாக சிந்தித்து எம் சமுகம் செயற்படுமாக இருந்தால் மலையகத்தில் பிராந்திய ரீதியில் ஒரு வலுவான நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அபிவிருத்தியுடன் கூடிய மலையகத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இதில் வேடிக்கை யாதெனில் பூனைக்கு யார் மணிக்கட்டுவது….?

மலையகத்தில் சிசுக்கொலை



குழந்தைகள் என்பது வரம். அதற்காக ஏங்கும் உள்ளங்கள் கோடி.  எனினும்  அதனை சாபக்கேடாகவும் துச்சமாகவும் கருதும் மனிதர்களும் இந்த சமுகத்தில்தான் வாழ்கின்றனர்.  இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில்  நாடளாவிய ரீதியில் குறிப்பாக மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சிசுக்கொலை சம்பவத்தை குறிப்பிடலாம். இது ஒரு குற்றச்செயல் எனபதனையும் தாண்டி ஒரு மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயலாகும். காரணம் உலகில் பிறக்கும்  ஒவ்வொரு உயிரினமும் தான் உயிர் வாழும் உரிமையினை கொண்டுள்ளது. அதனை அழிப்பதற்கான உரிமை எவருக்குமில்லை.

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் குறித்த குற்றமானது பொதுவாக குழந்தையின் பெற்றத்தாயினாலே  புரியப்பட்டுள்ளதுள்ளது. இதற்கமைவாக குழந்தை பிறந்த குறுகிய காலத்தினுள்ளே அவற்றிற்கு கொடூர உடலூறு ஏற்படுத்தபட்டுள்ளதுடன் அவை கொடுரமாகவூம்   கொலைச்செய்யப்பட்டுள்ளன. இவ் சிசுக்கொலை குற்றமானது வெறுமனே குழந்தை பிரவிசத்த பெண்ணால் மாத்திரமே புரியப்படுவதில்லை.சில சந்தர்ப்பங்களில் இதற்கு உடந்தையாக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,  அயலவர்கள், நண்பர்கள் பட்டாளம் என பலரும் காணப்படுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் இறுதியில் குறித்த பெண்ணே அதன் ஆபத்தான பின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டிய  வேண்டிய நிலை ஏற்படும். காரணம் குற்றம் புரிந்த பின்னர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதோடு  அவர்களின்  முழு எதிர்கால வாழ்வும் சிதைவடைந்துவிடும்.

இலங்கையினை பொருத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பாலியல் உறவினை வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கின்றது. எனினும் வலிதான திருமணத்தின் மூலமாக குறித்த இரு தம்பதியினரிற்குமிடையே பிறக்கும் குழந்தைகளே நெறிமுறையான குழந்தைகளாக சட்டம் அங்கீகரிக்கின்றது.  இதற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளின் நெறிமுறை தொடர்பில் கேள்வி எழுவதுடன் சில சந்தர்ப்பங்களில் அவை பிறந்த குறுகிய காலத்திலே (1 வருடத்திற்குள்) மேற்கூறியவிதத்தில் சிசுக்கொலையும்  செய்யப்பட்டுகிறது.அவ்விதம் கொலைசெய்யப்பட்ட சிசுக்கள் பிறந்தது ,

1. வலிதான திருமண உறவிற்கு அப்பால் வாழ்க்கை துணை அல்லாத வேறு நபருடன் கொண்டிருந்த நெறிமுறையற்ற உறவின் விளைவாக.

2. திருமண உறவு நிலைக்குழைந்த நிலையில் : வாழ்க்கை துணை இறப்பு  / கணவர் விட்டுச்செல்லல் / விவாகரத்து பெற்றிருத்தல் / நீதிமுறை பிரிவினையில் வாழுதல் போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்க்கை துணை அல்லாத நபருடன் கொண்டிருக்கும் உறவின் நிமித்தமாக பிறந்த குழந்தைகள்.

3. காதல் / கூடி வாழ்தல் / வேறுவகை உறவின் கீழ்  பிறந்த பிள்ளைகள்

4. பெண் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகத்தின் விளைவாக பிறக்கும் பிள்ளைகள்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளைகளில் 100 க்கு 99 % மான குழந்தைகள் பின்வரும் ஏதோ ஒரு காரணத்திற்காக  கைவிடல் / கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகுகின்றன.

இதற்கு பின்னனி காரணியாக  இருக்ககூடிய விடயங்கள் தான் என்ன? என ஆராயும் போது பின்வரும் விடயங்கள் நிகழ்வுகளின்  அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுகிறது. அவை: 

1.பெருந்தோட்டப்பகுதியில் இருக்க கூடிய சிக்கலான குடும்ப அமைப்புக்கள். உம்: பெரும்பாலும் வாழ்க்கை துணையில் ஒருவர் வேலை நிமித்தம் வெளிநாடு செல்வதும் நீண்ட கால இடைவெளியில் அங்கேயே தங்கிவிடுவதால் இங்கு இருக்ககூடிய வாழ்க்கை துணையின் பாதுகாப்பு உட்பட பெளதிக மற்றும் உளவியல் தேவைகளில் வெற்றிடம் நிலவுகிறது.  இந்த சந்தர்ப்பத்தில் ஒழுக்க விழுமிய கட்டுபாடுகளை பேணி வாழும் நபர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மன தடுமாற்றத்தில் தவறுகள் புரிவதும்  பிழையான உறவுகளை ஏற்படுத்தி கொள்வதன் விளைவாக குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தைகள் சிசுக்கொலை செய்யபட்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

2.பொதுவில் தமிழ் சமுகத்தில் பெண்கள் மறுமணம் செய்துக்கொள்வதை ஒரு ஆரோக்கியமாக பார்க்கும் கண்ணோட்டம் குறைவு. இது எமது மலையக சமுகத்திலும் விதிவிலக்கல்ல. இதில் இளம் வயதில் விதவையான பெண்கள் தனிமையில் விடப்படுவதுடன் அவர்களுக்கான தனிப்பட்ட ரீதியில் பூர்த்தி செய்ய வேண்டிய உள மற்றும் பெளதிக தேவைகள் தொடர்பில் வெற்றிடம் உருவாகிறது..  கணவன் இறந்ததன் பின்னர் பாதுகாப்பற்ற நிலையில் தனிமையில் வாடும் பெண்கள்  பாதுகாப்பு  உட்பட சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளவென அவர்களுக்கென புதிய  உறவினை ஒரு ஆணுடன் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. உறவின்  விளைவாக குழந்தை பிரசவிக்கலாம். அதே போல்  சில நேரங்களில் இவ்வாறான பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல், பலாத்காரம் என்பனவும் இடம்பெறவும் வாய்ப்புண்டு. எனவே மறுமணம் செய்யாது ஒரு விதவை பெண் கருத்தரிப்பதென்பதை சமுகம் அவதூறாகவே பார்க்கும். இவ்வாறான இக்கட்டான நிலையில் பிறக்கும் பிள்ளைகள் கொலை செய்யப்படுவதற்கும் வாய்ப்புண்டு.  

3.சில நேரங்களில் ஏற்கனவே திருமணமாகி அதன் விளைவாக பிறந்த குழந்தைகள் இருக்க, குறித்த பெண் தன் கணவர் அல்லாத வேறு ஆணுடன் கொண்டிருந்த உறவினால் / கணவன் இறப்பு அல்லது விட்டுச்சென்றப்பின் கணவர் அல்லாத ஆணுடன் கொண்டிருந்த உறவினால் பிள்ளைகள் பிறக்கும் போது அதனால் ஏற்கனவே உள்ள பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் காரணமாக / தனது பிள்ளைகளுக்கு தன் மீதான மரியாதை குறைந்துவிடும் என எண்ணி பிறந்த சிசுவினை கொலைசெய்யக்கூடும்.

4.இவ்வாறு பிறந்த குழந்தைகள் சமுக இழுக்கு என கருதும் பெண்கள் தம் பெயர் கெட்டுவிடும்  மற்றும் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என கைவிடல் / கொலைசெய்தல்

5. அக்குழந்தைகளை பராமரிக்க முடியாத பொருளாதார நிலையும் எதிர்காலத்தில் பெரும் சுமையாக மாறிவிடக்கூடும் என்ற நிலையினால் அதனை  கைவிடல்/ கொலை செய்தல்.

6.சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அக்குழந்தைகளை கைவிடல்/ கொலை செய்தல்.

7.இவற்றோடு மனோதத்துவ நிலை அடிப்படையில் குழந்தை பிரசவித்த தாயிக்கு பிரவத்தின் பின் இருக்க கூடிய மனநிலையால் செய்யப்படக்கூடிய   சிசு கொலைகள்.

மகாத்மா காந்திஜி

 



‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். 

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார். 

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது. 

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது. 

இறப்பு

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

Saturday, 17 October 2020

நான் ஒரு ஜனாதிபதியானால்...

 


 

நான் ஒரு ஜனாதிபதியானால் எனது நாட்டிற்கு சேவை செய்வேன். என் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவேன். மத, மொழி சார்பற்ற நடுநிலையாளனாக சேவை புரிவேன். எனது தேசத்தில் அனைவரைக்கும் சம உரிமை வழங்குவேன். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிடுவேன். எனது தேசத்தை சுத்தமாகப்பேணி  அழகிய தேசமாக்குவேன். சுமூகமான சர்வதேச உறவுகளைப் பேணுவதன் மூலம் என் நாட்டை சர்வதேச ரீதியில் உயர்த்துவேன். பொருளாதார நடவடிக்கைகளை சரிவர மேற்கொண்டு எனது நாட்டை பொருளாதார ரீதியில் செல்வந்த நாடாக்குவேன். எனது நாட்டில் வைத்தியம், கல்வி, நீதி போன்ற சேவைத்துறைகளை வளர்த்திடுவேன். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். ஏழைகளுக்கு தகுந்த உதவிகளை வழங்கி ஏழை இல்லா நாடாக எனது நாட்டை மாற்றிடுவேன். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அதனை தீர்த்து வைப்பேன். நான் ஜனாதிபதி என்றபோதிலும் ஆட்சிக்கு அப்பாற்பட்டு என் மக்களோடு சகஜமாக வாழ்ந்திடுவேன். எனது நாட்டில் நல்லாட்சிக்கு வழிவகுப்பேன். 

வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்

  பொதுஅறிவுடன் மொழிவளத்தையும் வளர்ப்பது வாசிப்புப் பழக்கம்!  வாசிப்பின் ஊடாகவே ஒருவன் பூரண  மனிதனாகலாம். வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமூகத்தை...